erdbookfair08082017-bigஈரோடில் நடைபெற்று வரும் புத்தக கண்காட்சியை பார்வையிட்ட திரளான மாணவ-மாணவிகள், புத்தகங்களை ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்.

ஈரோடு வ.உ.சி. மைதானத்தில், 13-வது புத்தக கண்காட்சி, கடந்த 4-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 230 அரங்குகள் அமைக்கப்பட்டு, சுமார் ஒரு லட்சம் புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

இந்த கண்காட்சியில், கலை, அறிவியல், இலக்கணம், இலக்கியம், வரலாற்று நூல்கள் உள்ளிட்ட அனைத்து வகையான புத்தகங்களும் விற்பனைக்கு கிடைக்கின்றன. நேற்று முன்தினம் வார விடுமுறையையொட்டி ஏராளமான மாணவ-மாணவிகள், தங்கள் உறவினர் மற்றும் நண்பர்களுடன் இங்கு வந்து, புத்தகங்களை ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர். அன்று நண்பர்கள் தினம் என்பதால், நண்பர்களுக்கு பரிசளிக்க புத்தகங்களை வாங்கியதாக, அவர்கள் தெரிவித்தனர்.