erdbookfestival05082017-bigஈரோடு வ.உ.சி மைதானத்தில் மக்கள் சிந்தனை பேரவை சார்பில் தொடங்கிய புத்தக கண்காட்சி திருவிழாவில் சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.
ஈரோடு வ.உ.சி மைதானத்தில் 13வது புத்தக கண்காட்சி திருவிழா, மக்கள் சிந்தனை பேரவை சார்பில் நேற்று தொடங்கியது. இந்த கண்காட்சியில் 230 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் விற்பனைக்காக குவிக்கப்பட்டுள்ளன. ஆன்மீகம், அரசியல் தலைவர்களின் வாழ்க்கை வரலாறு, டி.என்.பி.எஸ்.சி. புத்தகங்கள், பள்ளி, கல்லூரி புத்தகங்கள் மற்றும் குழந்தைகளுக்கான கதை புத்தகம், வரைபட புத்தகம் உள்ளிட்ட பல்வேறு வகையான புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் தள்ளுபடி விலையில் கிடைப்பது குறிப்பிடத்தக்கது. இந்த புத்தக கண்காட்சி தங்களுக்கு பெரிதும் உதவியாக இருப்பதாக பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் தெரிவித்தனர். புத்தக திருவிழாவையொட்டி, தினமும் மாலை நேரங்களில் பொழுதுபோக்கு அம்சமாக கவியரங்கம், பட்டிமன்றம் உள்ளிட்டவைகளும் நடத்தப்படுகிறது. நேற்று தொடங்கிய புத்தகத்திருவிழா 12 நாட்கள் நடைபெறுகிறது.