புத்தக பிரியர்களுக்கான செய்தி சென்னை இராயபேட்டையில் புத்தக திருவிழா ஜூலை21 முதல் ஜூலை 31 வரை நடைபெறுகிறது. தமிழ்நூல் வெளியீடு மற்றும் தமிழநூல் விற்பனை மேம்பாட்டு கழகத்தின் அறங்காவலர் சண்முகம் அவர்கள் கூரியதாவது வரும் ஜீலை 21 முதல் ஜூலை 30 வரை சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெறவிருக்கும் புத்தக திருவிழாவில் 250க்கு மேல் அரங்குகள் 200 பதிப்பாகத்தாரின் புத்தகங்கள் கண்காட்சி நடைபெறவிருக்கிறது . இவ்விழாவில் நலிந்து கிடக்கும் புத்தக விற்பனையை மேம்படுத்த வாசகர்களை நம்பியிருப்ப்பாதாக தெரிவித்தார்.

இப்புத்தக திருவிழாவில் 200க்கு மேற்ப்பட்ட புத்தக பதிப்பகத்தார்கள், பங்கேற்பதால் பெற்றோர்கள் மாணவர்கள் , போட்டி தேர்வுக்கு தயாராவோர்கள் மற்றும் சில தலைப்புகள் குறித்து அறிந்து கொள்ள புத்தகங்களை தேடுவோர்கள் போன்றோர்க்கான அறியதொரு வாய்ப்பு ஆகும் கல்வி அமைச்சர் செங்க்கோட்டையன் மற்றும் அமைச்சர் ஜெயக்குமார் புத்தக திருவிழாவை ஜூலை 21 இல் தொடங்க்கி வைக்கின்றனர். மேலும் புத்தக திருவிழாவில் தினசரி கவிதைகள் வாசிப்பு மற்றும் இராமனுஜர் 1000 சிறப்பிக்கும் கருத்தரங்குகள் , சினிமா கருத்தரங்கம் அத்துடன் மார்க்ஸ் சிறப்பு கருத்தரங்கம் நடத்தப்படும்.

வாரநாட்களில் பிற்பகல் 2 மணிக்கு தொடங்கும் புத்தக திருவிழா இரவு 8 மணி வரை நடைபெறும் . வார இறுதி நாடகளில் காலை 11 மணிமுதல் இரவு 9 மணி வரை கண்காட்சி தொடங்கும் . இத்தகைய கண்காட்சிகளில் பள்ளி , கல்லுரி மாணவர்கள் ஆசிரியர்கள் போன்றோர் வருகை அதிகரிக்கும் . புத்தக கண்காட்சியில் அனைத்து தரப்பினர்க்கும் அனைத்து தலைப்புகளையும் உள்ளடக்கியது. மேலும் வாங்கும் புத்தகங்களுக்கு 10% சதவீகித தள்ளுபடியும் அளிக்கப்படுகிறது . அனைவரும் சென்று வரவும் அறிவை பெருக்கும் விழாவில் பங்கேற்கவும். அனைத்து பாடங்களின் தலைப்புகளையும் , சமுகம், பொது பிரிவுகள் , உடல் நலம் போன்ற அனைத்து தலைப்புகளிலும் புத்தகங்கள் கிடைக்கும் அருமையான ஒரு இடமே புத்தக திருவிழா ஆகும் .