மனிதன் தன் வாழ்வில் தவறாது பயின்றொழுகவேண்டிய வாழ்வியல் அறங்களைப் பேசும் கருத்துக்கோவைகளின் பெட்டகமாக அமைந்துள்ளது இந்நூல்.

ஈடற்றதும் தேர்ந்தவையுமான அனுபவங்களின் வழி தாம் கண்டுணர்ந்த வாழ்வின் லட்சணங்களையும் அற்புதங்களையும் மாட்சிமைகளையும் மாண்புகளையும் எளிமையாகவும் சிறப்பாகவும் இந்நூலில் பதிவு செய்துள்ளார் நூலாசிரியர். வளமான வாழ்வுக்கு உன்னதமானதும் அடித்தளமானதுமான மனநிலையை உருவேற்றிக்கொள்வதற்கான அனைத்து வாயில்களையும் திறந்து காட்டுகிறது இவ்வரிய நூல்.