ezhuchi_100__71476_zoomராக்கெட் தொழில்நுட்பத்திற்கு ’பெரிலியம் டையாப்ராம்ஸ்’ என்ற பொருளும் தேவையான ஒன்று. இதனை நாம் வெகுநாட்களாக அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்து வந்தோம். ஆனால், இதன் மூலகம் பெரிலியம் தாது இந்தியாவில் கிடைப்பதைச் சுட்டிக்காட்டி, அதை எப்படி நாமே பயன்படுத்த வழிகண்டதை விளக்கும் பகுதி, அவர்மீதான மதிப்பை ஆயிரம் மடங்கு உயர்த்துகிறது. எதிர்கால சமுதாயம் நம்பிக்கை பெற்று வாழ உதவும் நல்லதொரு படைப்பு, ஆனால், உணர்ச்சிமிக்க இந்த புத்தகத்திற்கு ’எழுச்சி தீபங்கள்’ என்ற தலைப்பு சற்று தொய்வைத் தருகிற மாதிரி தோன்றுகிறது.