நெய்வேலி : நெய்வேலியில் என்.எல்.சி., இந்திய நிறுவனம் சார்பில் நடந்த புத்தகக் கண்காட்சி நிறைவு விழா நடந்தது.நிகழ்ச்சிக்கு, என்.எல்.சி., மின்துறை இயக்குனர் தங்க பாண்டியன் தலைமை தாங்கினார். இயக்குனர்கள் விக்ரமன், ராகேஷ்குமார், செல்வகுமார் மற்றும் முதன்மை பொது மேலாளர் மோகன் முன்னிலை வகித்தனர். என்.எல்.சி., மக்கள் தொடர்பு துறை துணை பொது மேலாளர் சீனிவாசன் வரவேற்றார்.முதன்மை விருந்தினர் கலெக்டர் ராஜேஷ் பேசுகையில், ‘நல்ல புத்தகங்கள் படிப்பதன் மூலம், நமது எண்ணங்களும் செயல்களும் துாய்மைபடுத்தப்படுவதால் நமது வாழ்நாள் அதிகரிக்கும்’ என்றார். என்.எல்.சி., மனித வளத்துறை இயக்குனர் விக்ரமன் பேசுகையில், ‘மக்களிடையே குறைந்து வரும் வாசிக்கும் பழக்கத்தை, திரும்பக் கொண்டு வருவதற்காக, இக்கண்காட்சிகள் நடத்தப்படுகிறது என்றாலும், பதிப்பகத்துறைக்கும், எழுத்தாளர்களுக்கும், புத்துணர்வு அளிக்கக் கூடிய வகையில், அவர்களை ஊக்கப்படுத்தும் செயல்களை என்.எல்.சி., இந்தியா நிறுவனம் மேற்கொண்டு வருகிறது’ என்றார்.