_11195கன்னடத்தில் ‘அம்மா ஆதா அம்மு : ஜெயலலிதா’, அதாவது ‘அம்மு என்கிற அம்மா: ஜெயலலிதா’ என்ற பெயரில் இந்த நூல் வெளிவந்துள்ளது. 262 பக்கங்களைக்கொண்ட இந்த நூலில், ஜெயலலிதாவின் குழந்தைப் பருவம் முதல் அவர் மறைந்தது வரை பல செய்திகள் சுவாரஸ்யமாக இடம்பெற்றுள்ளன.

மேலும், ஜெயலலிதாவின் குடும்பம் மற்றும் பெற்றோர் பற்றி வெளிவராத பல தகவல்கள் இந்தப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன. நேற்று விற்பனைக்கு வந்த இந்தப் புத்தகம், வந்த சில மணி நேரங்களில் விற்றுத் தீர்ந்தன. இதனால், இந்தப் புத்தகத்தை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட, புத்தக ஆசிரியர் என்.கே.மோகன்ராம் முடிவுசெய்துள்ளார். கூடிய விரைவில் ‘அம்மு என்கிற அம்மா : ஜெயலலிதா’ புத்தகத்தை தமிழில் படிக்கலாம்.

ஜெயலலிதாவின் வாழ்க்கையை படமாக எடுக்கும் முயற்சியில் மறைந்த தெலுங்கு இயக்குநர் தாசரி நராயண ராவ் ஈடுபட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.