தமிழ் நாவல் கலையின் பெருமிதம், ப. சிங்காரம். நவீன தமிழ் இலக்கிய எழுத்தாளர்களில் ஓர் அபூர்வ ஆளுமை. தன்னுடைய படைப்புகளோடும் வாழ்வோடும் இவர் கொண்டிருந்த உறவு தனித்துவமானது, அலாதியானது. இரண்டே இரண்டு நாவல்கள் மட்டுமே எழுதியிருக்கிறார். இரண்டு நாவல்களுமே தமிழ் நாவல் பரப்பின் எல்லைகளை விஸ்தரித்திருப்பவை. ப.சிங்காரத்தின் படைப்பு மொழி, நவீன உரைநடைகளில் மிகவும் விசேஷமானது. கதை மாந்தர்களின் மனமொழி தமிழில் இவரளவுக்கு எவரிடமும் இவ்வளவு அநாயசமாகக் கூடி வரவில்லை. மனக்குகை வாசல்கள் தாமாகவே திறந்து கொண்டு விட்டிருக்கின்றன. உணர்வுகளின் ரகசிய முகமூடிகள் கழன்று விழுந்து, உள்ளுக்குள் நடப்பதை அப்பட்டமாகக் காட்டுகின்றன. கடலுக்கு அப்பால் நாவலில் கடவுளின் புன்சிரிப்பும், புயலிலே ஒரு தோணியில் கடவுளின் மலர்ந்த சிரிப்பும் உள்ளுறைந்திருக்கின்றன. கடலுக்கு அப்பால் பெறுமதியான ஒரு நாவல். அதிலிருந்து சகல பரிமாணங்களிலும் விரிந்து பரந்து விகாசம் பெற்றிருக்கும் மகத்தான படைப்பு, புயலிலே ஒரு தோணி. நம் மொழியின் நவீன பொக்கிஷம்.
கடலுக்கு அப்பால், புயலிலே ஒரு தோணி
No Comments Wednesday 05 Apr 2017 | புத்தக விமர்சனம் |
- பார்வையற்றோருக்கான பிரெய்ல் பதிப்பில் க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி (2008)
- திறந்தே கிடக்கும் வீடு ! – நூல் விமர்சனம்
- தெய்வத்திருமகள் – நூல் விமர்சனம்
- பழைய புதிய திருவல்லிக்கேணி!
- கருப்பு வெள்ளை வானம்
- தேவதாசி ஒழிப்பு போராட்டக் களங்கள்
- புரட்சிப் பாடகர் கத்தார்… மறக்க முடியுமா?
- ஆதி திராவிடன் இதழ்த் தொகுப்பு
- இலையுதிராக் காடு
- மாவோயிஸம் இடதுசாரிகளின் விமர்சனம்
விருந்தினர் கருத்துக்கள்
இந்த பதிவுக்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!
உங்கள் கருத்துக்களை வெளியிட ...
Press Ctrl+g to toggle between English and Tamil
You must be logged in to post a comment.
ஏனைய செய்திகள்