1113மனித உணர்வுகளில் நம்பிக்கை ஏற்படுத்தும் உணர்வு காதலுணர்வு. ஓர் ஆணும் ஒரு பெண்ணும், ௔எனக்கு நீ, உனக்கு நான்!௕ என்று ஒரு பிணைப்பை ஏற்படுத்திக் கொள்ளும் வாழ்க்கைக்கு காதல்தான் ஆதாரம். வெவ்வேறு மனித உறவுகள் பரிமளிப்பதும் ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் காதலுணர்வால்தான். உயிருக்குள் உயிராய் வளர்ந்து நம்பிக்கையைப் பலப்படுத்தும் காதல் \ உன்னதமான காதல் \ சந்தேகத்துக்கு அப்பாற்பட்டது. காதலர்களுக்குள் நம்பிக்கை தகர்ந்து விட்டால்..? அதுதான் ௔தொட்டால், தொடரும்…௕ காதலைச் செதுக்கி, காதலர்களுக்கு உயிர்கொடுத்து உலவ விட்டிருக்கிறார் பட்டுக்கோட்டை பிரபாகர். ௔தொட்டால், தொடரும்…௕ | விகடனில் வெளிவந்து சில????ஆண்டுகளானாலும்,???இப்போதும் பக்கங்களுக்குள் பயணித்தாலும் சூடும் சுவையும் குறையாமல் வாசகர்களின் நெஞ்சை அள்ளும் விதமாகத் திகழ்கிறது என்பதுதான் இந்தக் கதையின் சிறப்பம்சம். தொட்டுப் படிக்கத் துவங்கிவிட்டால், நீங்களே தொடர்ந்து புரிந்து கொள்வீர்கள்.