நாமக்கல்: தமிழ்த்துறை பேராசிரியர் அனுராதா எழுதிய, ‘சங்க காலம் முதல் சமகாலம் வரை’ என்ற தலைப்பில், பத்து நூல்கள் வெளியீட்டு விழா, நாமக்கல்லில் நடந்தது. சினிமா பாடலாசிரியர் நெல்லை ஜெயந்தா தலைமை வகித்தார். பி.ஜி.பி., கல்வி நிறுவன தாளாளர் கணபதி, பொதிகை, ‘டிவி’ நிகழ்ச்சி தலைவர் ஆண்டாள் பிரியதர்ஷினி ஆகியோர், பத்து நூல்களை வெளியிட்டனர்.

ஆண்டாள் பிரியதர்ஷினி பேசுகையில், ”பெண் படைப்பாளிகள் அதிக சாதனைகள் படைக்க வேண்டும். அடுப்படியில் ஒடுங்கிக் கிடக்காமல், படிப்படியாய் வெளிவர வேண்டும். புத்தங்கள் எழுதுவதும், புதுமைகள் செய்வதும் பெண்களின் உரிமை,” என்றார். நூலாசிரியர் அனுராதா தன் ஏற்புரையில், ”ஒரு பெண் நினைத்தால், எதையும் சாதிக்கலாம். எத்தனை இடர்கள் வந்தாலும், அந்த இடர்களை எல்லாம் களையும் மருந்தாக தனக்கு படைப்பாற்றல் இருந்தது. இன்னும் ஒரு ஜென்மம் இருந்தால், நான் என் ஆசிரியர்களுக்கு மாணவியாகவே பிறக்க விருப்புகிறேன்,” என்றார்.