சென்னை: புத்தக கண்காட்சியில், டாக்டர் ராகவ பாரத்வாஜ் எழுதிய, ‘ரத்தமே உயிரின் ஆதாரம்’ என்ற புத்தக வெளியீட்டு விழா, நேற்று நடந்தது. இதில், திரைப்பட நடிகர் ராஜேஷ் பேசியதாவது:நம் நாட்டில், 4,000 நோய்கள் மனிதர்களுக்கும், 400 நோய்கள் விலங்குகளுக்கும், 40 நோய்கள் பறவைகளுக்கும், 8 நோய்கள் ஊர்வனத்திற்கும் உள்ளதாக ஆய்வு கூறுகிறது. நம் நாட்டு பாரம்பரிய உணவுகளை சாப்பிட்டால், நோய்களே வராது.

அமெரிக்காவில் உள்ள, 50 சதவீதத்திற்கும் மேற்பட்டோர், ‘கெமிக்கல் இம்பேலன்சால்’ பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுகிறது. நம் நாட்டினர், பாரம்பரிய உணவுகள் சாப்பிடுவதை தவிர்த்து, ‘ஜங்க் புட்’ சாப்பிடுவது அதிகரித்து வருகிறது. வரும் காலத்தில் இங்குள்ளவர்களுக்கும், ‘கெமிக்கல் இம்பெலன்ஸ்’ பாதிக்க வாய்ப்புள்ளது. பாரம்பரிய உணவின் முக்கியத்துவத்தை இளம் தலைமுறைக்கு கொண்டு  செல்ல வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.