10650017_940884692591937_3187570304394397347_nஅவளதிகாரம் புத்தக வெளியீட்டு விழா

நாள்;  செம்டம்பர்

இடம்; 13சர்.பிட்டி. தியாகராயா ஹால். தி.நகர். சென்னை-17

யாரிடமும் சொல்ல முடியாத் துயரங்களை, ரசனைகளை மற்றும் சமூகக் கோபங்களை எழுதிட முகநூல் சிறந்த வடிகாலானது. பிறகு இணையத்தில் எழுதிய ஒவ்வொரு கவிதையும் ரசிகர்களிடம் சிறந்து வரவேற்பைப்பெற்றது. இன்று நண்பர்களின் உந்துதலால் அவளதிகாரம் புத்தக வடிவைப் பெற்றுள்ளது.

பிரசவித்த ஒவ்வொரு பெண்ணுமே
பாரதியின் புதுமைப்பெண்தான்
நாமும் பாரதியாய் மாறிவிட்டால்!

என்ற அடிப்படைப் புரிதலின்படி பெண்களை மையமாக வைத்து எழுதப்பட்ட கவிதைத் தொகுப்பு அவளதிகாரம்.

நாம் தினமும் பார்க்கும் சராசரிப் பெண்களின் அழகியல் பரிமாணங்களையும் அறிவின் பரிணாமங்களையும் கல்வி, அறிவு, சமூகம், மனிதம், பாசம், காதல், காமம் மற்றும் வாழ்வியலையும் ரசனையோடு சேர்த்து எழுதியிருக்கிறேன்.

என் வாழ்வின் அழகான தருணத்தில் உடனிருக்க அனைவரையும் அன்புடன் அழைக்கிறேன்.