புதுச்சேரி: புதுச்சேரி பொதுப்பணித் துறை கண்காணிப்பாளராக பணியாற்றி ஓய்வு பெறுபவர் மாந்தையன். இவர் மக்கள் கலைக்கழகத்தின் நிறுவன தலைவர்களுள் ஒருவர். இவரது பணி ஓய்வு பிரிவு உபசார விழாவையொட்டி மாந்தையன் புகழ் அந்தாதி என்ற நூலினை கோனேரி ராமசாமி எழுதினார்.

இந்த நூலின் வெளி யீட்டு விழா காமராஜர் சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் நடந்தது. தமிழ்ச்சங்க செயலாளர் பாலசுப்ரமணியன் வரவேற்றார். மக்கள் கலைக்கழக தலை வர் கோனேரி ராமசாமி தலைமை தாங்கினார்.

மயிலம் பொம்மைய புர ஆதீனம் சிவஞான பாலயசுவாமிகள் கலந்து கொண்டு நூலை வெளியிட பொதுப் பணித்துறை தலைமை பொறியாளர் மனோகரன் பெற்றுக்கொண்டார். மக்கள் கலைக்கழக பொதுச்செயலாளர் தேவதாசு சிறப்புரை ஆற்றினார். செயலாளர் விசாலாட்சி தொகுப்புரை வழங்கினார். தமிழ்ச்சங்க துணைத் தலைவர் சீனுவேணுகோபால் வாழ்த்துரை வழங்கினார். விழாவில் ஓய்வுபெறும் கண்காணிப்பாளர் மாந்தையன் கவுரவிக்கப்பட்டார். தமிழறிஞர்கள், பொறியாளர்கள் கலந்து கொண்டனர். அரிகிருஷ்ணன் நன்றி கூறினார்.

   Send article as PDF