BOOKFUNCTDTகவிஞர் கு.சா.கிருஷ்ணமூர்த்தியின் நூற்றாண்டு விழாவையொட்டி, ‘‘கவிஞர் கு.சா.கிருஷ்ணமூர்த்தியின் திரையிசைப் பாடல்கள்’’ என்ற நூல் வெளியீட்டு விழா சென்னை நங்கநல்லூரில் உள்ள வாழ்க வளமுடன் சிற்றரங்கத்தில் நடந்தது. புதுகைத் தென்றல் ஆசிரியர் மு.தருமராசன் தலைமை தாங்கி, நூலை வெளியிட்டார். முதல் பிரதியை புதுக்கோட்டை இலக்கியப் பேரவைத் தலைவர் முத்துசீனிவாசன் பெற்றுக் கொண்டார். நூல் தொகுப்பாளர் கவிஞர் பொன்.செல்லமுத்து, வாமனன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கவிஞர் கு.சா. கிருஷ்ண மூர்த்தியின் திரையிசைப் பாடல்கள் அடங்கிய ஒலி ஒளி காட்சியை தாமோதரக்கண்ணன் வழங்கினார். ஓய்வு பெற்ற பேராசிரியர் ஸ்ரீனிவாசன், மொழிபெயர்ப்பாளர் ராமசாமி, ஊடகவியலாளர் அறந்தைமணியன் உள்ளிட்ட கவிஞர்கள் பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக குழந்தை இலக்கியச் செல்வர் பி.வெங்கட்ராமன் வரவேற்றார். எஸ்.பி.பாலு நன்றி  கூறினார்.