அண்ணலக்ரகாரத்தில் வழக்குரைஞரும்,  ஊராட்சித் தலைவருமான மாணிக்கவேலு எழுதியுள்ள “கண்டதைப் படித்தால் பண்டிதன் ஆகலாம்’ நூல் வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது.

விழாவுக்கு  தஞ்சை எம்எல்ஏ எம். ரெங்கசாமி தலைமை வகித்தார்.

இதில், மாநில மீன்வளத் துறை அமைச்சர் கே.ஏ. ஜெயபால் பங்கேற்று புத்தகத்தை வெளியிட, கும்பகோணம் மூத்த வழக்குரைஞர் கீதாலயன் பெற்றுக்கொண்டார்.

இதில், முன்னாள் எம்எல்ஏ ராம. ராமநாதன், நகர்மன்றத் தலைவர் ரத்னாசேகர்  உள்ளிட்டோர் பங்கேற்றனர்.