இறையன்பு படைப்புலகம் !கருத்தரங்கம் !

உரை ; முது முனைவர் வெ.இறையன்பு இ .ஆ .ப .அவர்கள்

தொகுப்பு ; கவிஞர் இரா .இரவி .

தலைப்பு ;வையத் தலைமை கொள் !

இடம் மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி மதுரை .

என்னைப் பெற்றது சேலம் .என்னைத் தத்து எடுத்தது மதுரை .எனக்கு மிகவும் பிடித்த ஊர் மதுரை .

மாணவர்களே உங்கள் நோக்கத்தை முடிவு செய்து கொள்ளுங்கள். ஒவ்வொரு நாள் முடியும் போதும் நோக்கம் நோக்கி என்ன செய்தோம் என்று சிந்தித்துப் பாருங்கள் .

ஒருவர் சொன்னார் என் நிறுவனத்திற்கு மூன்று கணக்கு எழுதுகிறேன்.ஒன்று வருமானவரித் துறைக்கு ஒன்று என்னுடைய பாட்னருக்கு ஒன்று. உண்மையான கணக்கு ஒன்று .ட்ரிப்பில் என்ட்ரி என்றார் .எந்த ஒரு செயலையும் தள்ளிப் போடாதீர்கள்.11 மணிக்கு செய்யலாம் என்று நினைத்து 10.55 மணிக்கு இறந்து போகலாம். யாருக்கும் அறிவுரை சொல்லப் போவதில்லை .
மகத்தான காலத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். உலகத்திலேயே இளமையான நாடு இந்தயாதான் .அதோ பெரியவர் கை தட்டுகிறார் பாருங்கள் .இளமை என்பது நினைவு தொடர்பானது. வயது தொடர்பானது அல்ல இந்தியாவில் 65% பேர் 35 வயதிற்குள் இருப்பவர்கள் .எனவே உலகத்திலேயே இளமையான நாடு இந்தயாதான் .மகாகவி பாரதியார் பாடினார் இளைய பாரதத்தினாய் வா! வா ! என்று.

மனிதர்கள் பல வகை உண்டு .சிலரைப் பார்த்தால் மகிழ்ச்சி வரும்.சிலரைப் பார்த்தால் தூக்க மாத்திரை இல்லாமலே தூக்கம் வரும் .நம்மை நாமே கேள்வி கேட்க வேண்டும் . பிறந்த ஊருக்கு, குடும்பத்திற்கு என்ன பங்களிப்பு செய்தோம் என்று .கேள்விகள் மனதில் விதையாகி விருட்சமாகி விடும் .

நண்பர் முனைவர் சுந்தர ஆவுடையப்பன் இங்கு வந்துள்ளார். கொடைக்கானல் வானொலிதான் அவர் உலகம் . வானொலியில் நல்ல கருத்துக்களை நல்ல சொற்களை எப்படி வழங்கலாம் .நல்ல நிகழ்ச்சி எப்படி வழங்கலாம் .இளையவர்களுக்கு எழுச்சி உரை எப்படி வழங்கலாம் .என்று சிந்தித்து செயல்படுவார் .அங்கே அவர் வையத் தலைமை கொள்கிறார் .மற்றும் நான் மதுரையில் இருந்த காலம் மறக்க முடியாத வசந்த காலம் .மதுரை நண்பர்கள் தணிக்கையாளர் சண்முக சுந்தரம் ,N.C.B.H.கிருஷ்ணமூர்த்தி ,முனைவர் பசும்பொன் முனைவர் வா .நேரு வந்துள்ளனர் .

கவிஞர் இரா .இரவி வந்துள்ளார் .இவரிடம் ஒரு செயல் சொன்னால் போதும் உடன் செம்மையாக முடித்து விடுவார் .ஆற்றல் மிக்கவர். இவரிடம் புலிப்பால் கேட்டால் கூட கொண்டு வந்து விடுவார். அதனால் இவரை புலிப்பால் இரவி என்றே அழைப்பதுண்டு .

ஒருவர் மிகவும் நேர்மையானவர் அதிகாரி .அவர் அறைக்கு சென்றால் அமர வைப்பார் .தன பணத்தில் தேநீர் வாங்கி கொடுப்பார் .மனுவை பெற்றுக் கொள்ளவார் .ஆனால் அந்த மனு மீது ஒரு துரும்பைக் கூட அசைக்க மாட்டார் .அவர் நேர்மையாக இருந்து என்ன பயன் .உதவிடும் உள்ளம் வேண்டும் .

மிடுக்கோடு நடந்து கொள்ள உதவுவது தலைமைப் பண்பு .மன தயாரிப்பு வேண்டும் .நிறுவனங்கள் அனுபவசாலிகளை மட்டும் விரும்புவதில்லை .புதிதாக உள்ளவர்களையும் விரும்புகின்றனர். செய்த தவறையே திருப்ப செய்பவர்கள் அனுபவசாலிகள்.ஒரு போதும் புதிய முயற்சியை ஏற்க மாட்டார்கள்.உலகம் வளந்ததற்கு காரணம் புதிய முயற்சியே .

இது நடக்காது என்று சொல்வது மனிதமனம் .புதிதாக நடத்திக் காட்டுவேன் என்பது வெற்றி நிலை .அரசியல், விளையாட்டு, இலக்கியம் எந்தத் துறையாக இருந்தாலும் புதிதாக முயற்சி செய்தவர்களே சாதிக்கிறார்கள் .

சேக்ஸ்பியர் பல்கலைக் கழகத்தில் படிக்கவில்லை . அன்று படித்தவர்களே நாடகங்கள் எழுதினார்கள் .சேக்ஸ்பியருக்கு நாடகம் எழுத வேண்டும் என்று ஆசை வந்தது .நாடக கட்டுப்பாடுகளைத் தகர்த்து விட்டு நாடகம் எழுதினார் .கேலி செய்தனர் .கண்டனம் வந்தது. அன்று அவர் புதிதாக செய்ததால்தான் இன்றும் நிலைத்து நிற்கிறார் .

ஆங்கில இலக்கியம் என்றாலே நினைவிற்குவருவது சேக்ஸ்பியர்தான் .புதுமையான கருது சொல்லும்போது ஏற்கபடா விட்டாலும் .களம் கடந்து ஏற்கப்படும்.அதனால் காலம் கடந்து வாழ்கிறார்கள் .சேக்ஸ்பியரை தவிர்த்து விட்டு ஆங்கில இலக்கிய வரலாறு எழுத முடியாது .

மாற்றம் வேண்டும் .அந்த மாற்றம் நிலைத்து நிற்பதாக ,மக்களே ஏற்று மாற்றம் செய்வதாக இருக்க வேண்டும் .மனிதனுக்குள் இருக்கும் சாத்தியக்கூறுகளை உணர்த்துவதாக இருக்க வேண்டும்.எளிமையாவும் இருக்க வேண்டும் .ஆடம்பரம் தேவையற்றது .பளபளப்பான ஆடை விரைவில் பல் இளித்து விடும். மாற்றம் படிப்படியாக இருக்க வேண்டும் .

மக்கள் பிரதிநிதிக்கு கட்டுப்பட விரும்பினான் முதலாம் சார்லஸ்.மன்னனை தூக்கில் இட்டனர் .காரணம் மக்கள் விரும்பி ரசித்த நாடகங்களை தடை செய்தான் .அடிப்படை விசயத்தில் கை வைத்தான் . மன்னன் நாடகத்தை தடை செய்தான் .நாயையும் கரடியையும் சண்டையிட வைத்து மக்கள் ரசித்து வந்தனர் .அதையும் மன்னன் தடை செய்தான் .
இரண்டாம் சார்லஸ்நாடகத்தை அனுமதித்தபோது தரமற்ற மிக மலிவான நாடகங்கள் நடந்தன .இன்றைய தொலைக்காட்சித் தொடர்கள் முடியவே முடியாது .வாழ்க்கையை விட நீளமானவை. தொடரில் நடிப்பவர் நடிக்க மறுத்தால் அவரை தொடரில் சாகடித்து விடுகிறார்கள்.

மாற்றம் படிப்படியாக நிகழ்த்தினால்தான் வெற்றி பெற முடியும் .வார்த்தை செயல் ஊக்குவிப்பு மூலமாக மாற்றம் கொண்டு வர வேண்டும் .

அரண்மனையில் தினமும் விருந்து நடக்கும் .எதிரே பிச்சைக்காரன் அவனுக்கு விருந்து உன்ன வேண்டும் என்று ஆசை வந்தது .நல்ல உடை அணிந்து சென்றால் தானே உள்ளே விடுவார்கள் .மாடத்தில் நின்ற இளவரசனிடம் தன் ஆசையை சொன்னான் .உடன் இளவரசன் புதிய நல்ல உடை வழங்கினான் .இந்த உடை என்றும் கிழியவே கிழியாது .அழுக்கும் படாது .இந்த ஒரு ஆடையே உன் ஆயுள் முழுவதற்கும் போதும் .சிறப்பான ஆடை வைத்துக் கொள் என்று வழங்கினான் .பிச்சைக்காரன் புதிய உடை அணிந்து கொண்டான் ஆனால் ஒரு வேளை இந்த ஆடை கிழிந்தால் தேவைப்படும் என்று
பழைய ஆடையை தூக்கிப் போடாமல் கையில் சுமந்து கொண்டே சென்றான் .வாழ்நாள் முழுவதும் சுமந்தான். பலர் கவலைகளைத் தூக்கிப் போடாமல் சுமந்து கொண்டே வாழ்கிறோம்.மனதில் தயாரித்து வைக்கப்பட்ட எண்ணங்களை சுமந்து கொண்டு இருக்கிறோம் .

கேள்வி கேட்டுப் பாருங்கள் .தலைமையால் என்ன செய்ய முடியும். பிடல் காஸ்ட்ரோ 89 பேரோடு மட்டும் இராணுவத்தை எதிர்கொண்டு வெற்றி பெற்றார் .எப்படி முடிந்தது என்று கேட்டபோது சொன்னார் இப்போது என்றால் எனக்கு 25 பேர் போதும் என்றார். விடுதலை அடைய நல்ல தலைமை வேண்டும் .தலைமை நினைத்தால் தரிசு நிலத்தையும் சோலையாக்க முடியும் .அறிவியல் சிந்தனை ஊற்று எடுக்க வேண்டும் .தலைமை நினைத்தால் சோம்பிக் கிடப்பவர்களையும் தூக்கி நிறுத்த முடியும் .

ஒருவர் பயன்படாது என்று வீணையை குப்பைத் தொட்டியில் எறிந்து விட்டார் .இதைக் கண்ட ஒருவர் அந்த வீணையை எடுத்து கம்பிகளை இழுத்துக் கட்டி வண்ணம் பூசி சரி செய்து இசைத்தார் .இனிய இசை கேட்டது .இசை கேட்க கூட்டம் கூடியது .வீணையை குப்பைத் தொட்டியில் எறிந்தவரும் வந்தார் .கண் மூடி இசையை ரசித்தார் .பின் இது என்னுடைய வீணை கொடுங்கள் என்றார் .வீணையை தூக்கி எறிந்தபோதே தொடர்பு அறுந்து விட்டது .இப்போது இது என் வீணை தர மாட்டேன் என்றார் . நம்மிடம் உள்ளவற்றின் மதிப்பை அறியாமல் இருந்து விடுகிறோம் .

தூய்மையானவர்களையும் , நேர்மையானவர்களையும் , உயர்வானவர்களையும் பூஜிக்கவும் , விமர்சனம் செய்யவும் எப்போதும் நபர்கள் உண்டு .விமர்சிக்கிறார்கள் என்பதற்காக நல்ல செயலை நிறுத்தி விடாதீர்கள் ..பெரிக்கல்ஷை ஒருவர் கண்டபடி விமர்சனம் செய்தார் .அவர் பேசி முடித்தவுடன் ஒருவரை அழைத்து கையில் விளக்கைக் கொடுத்து இவரை வீட்டில் கொண்டு விட்டு வாருங்கள் என்றார் .

அலெக்சாண்டரிடம் தலைமைப் பண்பு இருந்தது .உலகத்தையே ஆளும் ஆற்றல் உங்களிடம் உள்ளது என்பதை உணர்த்தினார் .
எதிர் நாட்டினர் படையில் சிங்கம், புலி ,கரடி .சிறுத்தை என கொடிய விலங்குகளை அனுப்பினார்கள் .நெருப்பைக் கக்கும் இயந்திரம் செய்து கொண்டுவந்து நிறுத்தினார்கள் .நெருப்பைக் கண்டவுடன் கொடிய விலங்குகள் பயந்து ஓடி விட்டன . போரில் வென்றார் .
.
சாக்ரடீஸ் கேள்வி கேட்காமல் ஒத்துக் கொள்ளாதே என்றார். சொன்னவரிடம் கேட்காவிட்டாலும் நமக்குள்ளாவது கேள்வி கேட்க வேண்டும் .கொட்டாவி , ஏப்பம் , விக்கல் , தும்மல் ஏன் வருகிறது என்று நம் கேள்வி கேட்டு இருக்கிறோமா .இல்லை .ஒவ்வொன்றும் ஒரு காரணம் உள்ளது .சாக்ரடீஸ் மக்கள் முன் தோன்றுவார். எளிமையானவர் .எடுக்கப்படாத தாடி , கழுவாத முகம் , பேசுவார். நான் படிக்காதவன் எனக்கு எதுவும் தெரியாது .எனக்குத் தெரிந்தது எனக்கு எதுவும் தெரியாது எனபதுதான் .சாக்ரடீஸ் வினா கேட்பார். நீங்களே சிந்தியுங்கள் என்பார் .இளைஞர் களைத் திரட்டினார். சாக்ரடீஸ் அவர்களின் தலைமைப் பண்பு கேள்வி கேட்க தூண்டியது.

ஒருவர் பேசினார் .இந்த அவையில் உள்ளவர்களில் 50% பேர் முட்டாள்கள் என்றார் .செருப்பு வந்து விழுந்தது .மற்றவர் பேசினார் இந்த அவையில் உள்ளவர்களில் 50% பேர் முட்டாள்கள் இல்லை என்றார் மலர்கள் வந்து விழுந்தது .ஒரே கருத்து சொல்லும் விதம் முக்கியம் உலகத்தில் அதிகம் விற்கும் சிலை புத்தர் சிலைதான். ஆனால் புத்தர் சிலை வைத்திருக்கும் பலருக்கும் புத்தர் பற்றி தெரியாது .அவர் போதனை பற்றி தெரியாது .ஆன்மா இல்லை என்று சொல்லும் துணிவு புத்தருக்கு இருந்தது .விரதம் இருந்து உடலை வருத்துவதால் ஞானம் வராது. என்றார் புத்தர். பசியில் இருப்பவனுக்கு நிலவும் ஆப்பம் போலத் தெரியும் .

ஆற்றலை உணர வைக்கும் தன்மை நல்ல தலைமைக்கு உண்டு. வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் .இன்று சாத்தியக் கூறுகள் அதிகம். வாய்ப்புகள் விரிந்து கிடக்கின்றன. வானமே எல்லை. வானத்திற்கு எல்லையே இல்லை . எந்தத் துறைக்குச் சென்றாலும் முத்திரை பதிக்கலாம் .எந்தத் துறை என்று முடிவு செய்யுங்கள். புலன்கள் அனைத்தையும் ஒன்று படுத்துங்கள் .மாணவர்களே உங்களுக்கு இது சரியான பருவம் .இலக்கைத் தவற விடாமல் ஒவ்வொரு நொடியையும் பயன் படுத்துங்கள் .வெற்றி பெறுங்கள் .

இரண்டு நாள் கருத்தரங்கின் வெற்றிக்காக சில மாதங்களாக ஓய்வின்றி உழைத்த இனிய நண்பர் முனைவர் பேராசிரியர் நம் சீனிவாசன் அவர்களுக்கும் .மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி நிர்வாகத்தினருக்கும் நன்றி .என்று சொல்லி முடித்தார் .

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com

www.kavimalar.com

http://www.eraeravi.blogspot.in/
.
http://www.tamilthottam.in/f16-forum

http://eluthu.com/user/index.php?user=eraeravi

http://www.noolulagam.com/product/?pid=6802#response*

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !