புத்தக பெயர்: அருள்மிகு ஆன்மிகம்
ஆசிரியர்: நரியம்பட்டு எம்.ஏ.ஸலாம்
புத்தக விலை: ரூ.250
வெளியீடு: அல்ஜாமிஅத்துல் அரபியா அர்ரஹ்மானியத்துல் ஆதிலியா, ரஹ்மானியா நகர், ராதாபுரம்–606 707

மங்களூரைச் சேர்ந்த காஜா ஷேக் முஹம்மத் அப்துல் காதிர் ஷாஹ்வால் உருது மொழியில் எழுதப்பட்ட தஸவ்வுப் ரஹ்மானி என்ற நூலை அருள்மிகு ஆன்மிகம் என்ற பெயரில் தமிழில் மொழி பெயர்த்துள்ளார், நரியம்பட்டு எம்.ஏ.ஸலாம்.

மனிதனை மனிதனாக வாழ வைக்கின்ற ஆற்றல் ஆன்மிகத்திற்கு உண்டு. தன்னை படைத்த இறைவன் யார் என்பதை இந்நூல் புரிய வைக்கிறது. இதனை ஆழ்ந்து படிப்போரின் உள்ளங்களில் ஆன்மிகப் பேரோளி சுடர்விட்டுப் பிரகாசிக்கும்.

இந்நூலில் தியாகத்தின் தத்துவங்கள், கலிமா தய்யிபாவின் (இறை விசுவாசம்) ரகசியங்கள், முகம்மது நபி (ஸல்) அவர்களின் மகத்துவங்கள், நப்ஸின் வகைகள், தொழுகை உள்ளிட்ட கட்டாய கடமைகள் போன்ற பல விஷயங்கள் தரப்பட்டுள்ளன.