கருத்து வேறுபாடுகள் அருளா? அழிவா? – மௌலவி நூஹ் மஹ்ழரி; பக்.168; ரூ.70; இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட், 138, பெரம்பூர் நெடுஞ்சாலை, சென்னை -12.

இன்றைய முஸ்லிம் சமுதாயத்தில் புரையோடி கொண்டிக்கின்ற விஷயம் மார்க்க விஷயத்தில் நீ சொல்வது சரியா, நான் சொல்வது சரியா என்பவை. இவ்வாறு தங்களுக்குள் முரண்பாடு இருக்கையில் “வாராது வந்த மாமணி போல’ நம் கையில் கிடைத்த அரிய பொக்கிஷம் இந்த நூல்.

கருத்து வேறுபாடுகள் இப்பரந்த அறிவுசார் இஸ்லாமிய மார்க்கத்தில் தவிர்க்க முடியாதது என்றும், அதை நாம் எவ்வாறு கையாளுகின்றோம் என்பதில்தான் இருக்கிறது என்றும் அழகிய உதாரணங்களுடன் நூலாசிரியர் தெளிவுபடுத்தியிருக்கிறார்.

குறிப்பாக முஸ்லிம் சமுதாயம் தங்களையே அழித்து கொள்ள பயன்படுத்தும் நபி மொழியான 73 கூட்டங்கள் சம்பந்தமான நபிமொழி குறித்து தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. முஸ்லிம்களின் கையில் இருக்க வேண்டிய தவிர்க்க முடியாத நூல்.