புத்தக பெயர்: தமிழர் வரலாறு
புத்தக விலை: ரூ.250
வெளியீடு: பூம்புகார் பதிப்பகம், 127, பிராட்வே, சென்னை-108

உலகிலேயே தொன்மையான மொழி தமிழ். தொன்மையான மக்கள் தமிழர். தமிழ்நாட்டுடன் இணைந்திருந்த குமரிக்கண்டம் (லெமூரியா) கடலில் மூழ்குவதற்கு முன்பே, தமிழர்கள் நாகரிகம் மிக்கவர்களாக வாழ்ந்தனர். மேல்நாட்டு ஆராய்ச்சியாளர்கள் பலரும் இந்த உண்மையை ஒப்புக்கொண்டுள்ளனர்.

பெருமை மிக்கத் தமிழரின் வரலாற்றை கற்காலத்தில் இருந்து தொடங்கி, சேர, சோழ, பாண்டியர் ஆட்சி பற்றி விவரித்து, அந்நியர் ஆட்சியின் போது நிகழ்ந்த முக்கிய நிகழ்ச்சிகளையும் குறிப்பிட்டு இந்த நூலை  எழுதியுள்ளார், “மொழி ஞாயிறு” தேவநேயப்பாவாணர். வரலாற்றில் மறைக்கப்பட்ட உண்மைகளையும், வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளார். பல ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட இந்நூல், இப்போது நவீன கட்டமைப்புடன் அழகிய பதிப்பாக வெளியிடப்பட்டுள்ளது.