தமிழ்வளர்க்கும் அறிவியல், இராம. சுந்தரம், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி)லிட், 41பி சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், சென்னை-600 098. பக். 316 விலை ரூ.125/-

‘தமிழை வளர்க்கும் அறிவியல், அறிவியலை வளர்க்கும் தமிழ்’ என இரு கருத்துகளை உட்கொண்டது நூலின் தலைப்பு. அறிவியல் தமிழ் ஆக்கம், தமிழ்வழி அறிவியல் கல்வி, தமிழ்மொழி வரலாற்றில் அறிவியல் தமிழின் பங்கு, தமிழ் கலைச் சொல்லாக்க முயற்சிகள், கோட்பாடுகள். சொல்வளம், எழுத்துப் பெயர்ப்பு, மரபு சார் அறிவியல், குழந்தைகளுக்கான அறிவியல் நூல் முதலிய 22 கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். இக்கட்டுரைகள் வெவ்வேறு காலகட்டங்களில் எழுதப்பட்டவை. எனினும் தொகுத்துப் பார்க்கும்போது பயன் மிகுதியாகவே உள்ளது. உலகத் தமிழ்ச்செம்மொழி மாநாடு நடக்கவிருக்கும் சூழலில் இந்நூல் வெளிவந்திருப்பது பாராட்டுக்குரியது. “தமிழால் முடியும்” என்ற நம்பிக்கையின் குரலை வலுவாய் எதிரொலிக்கும் இந்நூல் பாராட்டுக்குரியது.