வங்கித்துறை சீரழிவும் காரணமும், வ. மோகன கிருஷ்ணன், தீயாக தீபங்கள் வெளியீடு. 63/5 பார்க்துகார், இராமாபுரம், சென்னை-600 098.

பக். 80. விலை ரூ. 20/-

சுவரேறிக் குதிக்கும் திருடன் படத்தை அட்டையிலே தாங்கி; நூலின் கருப்பொருளை உணர்த்திவிட்டனர் பதிப்பாளர்கள். வங்கிகளின் வளர்ச்சி ஏற்பட்டது எப்படி? யாருக்கு இதனால் லாபம்? பொதுப்பணத்தை விழுங்கி ஏப்பம் விட்டவர்கள் யார்? ஏமாற்றப்பட்டவர்கள் யார்? வங்கிகளை சீரழித்தது யார்? சீரழிப்பது ஏன்? இப்படி பல கேள்விகளுக்கு விடையாய் வந்துள்ளது இந்நூல். வாராக் கடன் என்கிற பெயரில் ஏப்பம்விட்ட ‘பெரிய மனிதர்களின்’ பட்டியலும் இந்நூலில் உண்டு “கூடைக்காரியின் நூறு ரூபாய் கடன் பாக்கி குறித்து நீட்டி முழங்கும் முதலாளித்துவ ஊடகங்கள் இந்த மகாமோசடிக்காரர்கள் பெயரை ஒருபோதும் வெளியிட்டதில்லை. இந் நூலை வெளியிட்ட மோகன கிருஷ்ணன் பாராட்டுக்குரியவர். இந்நூல் கூறும் உண்மைகள் மீண்டும் மீண்டும் உரக்கப் பேசப்பட வேண்டும்”