பெட்ரோல் அரசியல் வே. மீனாட்சிசுந்தரம். பாரதி புத்த காலயம், 7, இளங்கோ தெரு, சென்னை – 600 018. பக். 32. விலை ரூ.10/-

“பெட்ரோல் அரசியல்” என்ற சிறு நூலை தோழர் வே. மீனாட்சி சுந்தரம் அவர்கள் எழுதியுள்ளார். இதில் முக்கியமாக பெட்ரோல் விலை ஏறி இறங்கக் காரணம் என்ன என்பதை விளக்கியுள்ளார்.

32 பக்கங்களில் 17 கேள்விக ளுக்கு இவர் அளித்துள்ள பதில் கள் பெட்ரோல் அரசியல் ஆயுதமான வரலாற்றை, சதியை நறுக் கென நெஞ்சில் பதியவைக்கிறது.

2008-ஆம் ஆண்டில் 140 டாலர்கள் வரை பெட்ரோல் விலை உயர்ந்து, இது 2010-ஆம் ஆண்டில் கீழே இறங்கியது. இதற்கு அமெரிக்க, ஐரோப்பிய பணமூட்டைகள் பணத்தை பெருக்க, சுருக்க வழிகளைக் கையாண்டு இழந்த சொத்து மதிப்பைச் சரிக்கட்ட உருவாக்கப்பட்ட தற்காலிக திடீர் உயர்வாகும். இது ஒரு வர்த்தகச் சதி. 2007-ஆம் ஆண்டில் ஐரோப்பிய அமெரிக்க நிதி நிறுவனங்கள் திவாலானதால், அவைகளைக் காப்பாற்ற அமெரிக்க ஐரோப்பிய அரசுகள் எடுத்த பல முயற்சிகளில் இதுவும் ஒன்று. இது உலக மக்க ளின் தலையில் சுமையைத் தூக்கி வைக்கும் சூழ்ச்சியாகும்.

பெட்ரோலியச் சந்தையில் விலை நிலவரத்தைத் தீர்மானிப்பது ஐந்து அமெரிக்க ஐரோப்பிய பகாசுர ஃப்யூச்சர் நிறுவனங்களே! இதைப்பற்றி இந்த நூலில் விரிவாக ஆசிரியர் விவரித்துள்ளார். இச்செய்தி வாசகர்கள் மனதில் பதியவைக்க வேண் டிய முக்கியச் செய்தியாகும்.

அமெரிக்க ஏகபோகத்தை எதிர்த்து இத்தாலி நாட்டின் என்ரிக்கோ மெட்டிய் போராடிய விவரங்களும், அவரின் சாவின் பின்னால் உள்ள மர்மங்கள் இன்னும் துலக்கப்படாமல் இருப்பது பற்றியும் இந்நூல் வலுவாகப் பேசுகிறது. நீராவி என்ஜின் கொண்டு காலனி ஆதிக்கத்தையும், பெட்ரோல் என்ஜினைக் கொண்டு இரண்டு உலக யுத்தங்களையும் கொண்டு வந்த ஏகாதிபத்தியத்தின் நோக்கங்களை இந்நூலில் ஆசிரியர் நுட்ப மாக விவரித்துள்ளார்.மெக்ஸிகோ வளைகுடா விபத்து பற்றியும், ஏகாதிபத்திய ஆதிக்க வெறியைப் பற்றியும் இந்நூலில் நன்கு சொல்லப் பட்டிருக்கிறது.

பெட்ரோலியப் பொருட்கள் சாதாரண சந்தைச் சரக்காக இருந்து எப்படி இராணுவ அரசியல் சரக்காக மாறியது என்பதை நூலாசிரியர் தெளிவாக விளக்குகிறார். இதனை ஒவ்வொருவரும் கட்டாயம் புரிந்து கொள்ள வேண்டும். அதேபோல் சர்வதேச சந்தை விலையும், இந்தியச் சந்தை விலையும் ஏறுக்குமாறாக இருப்பதை அலசியுள்ளார். இவ்வாறு இந்நூல் “பெட்ரோல் அரசியல்” குறித்து விரிவாகவும், ஆழமாகவும் நமக்குப்பல செய்திகளைக் கூறுகிறது. அனைவரும் தவறாமல் படிக்க வேண்டிய மிக அவசியமான நூலாகும். ஏற்கெனவே தீக்கதிர் நாளேட்டின் வார இணைப்பான ‘வண்ணக்கதிரில்’ வெளிவந்தது என்பதை பதிப்பகத்தார் குறிப்பிட மறந்தது ஏனோ?