மு.வ. நூற்றாண்டு மலர், பதிப்பாசிரியர்: புலவர் பா. வீரமணி, பாரி நிலையம், 184/88, பிராட்வே, சென்னை- 600 108. பக்.320 விலை: ரூ.250

தமிழகத்தில் 1945 முதல் 1970 வரை முழுவதும் வியாபித்துக் கோலோச்சிய- இளைஞர்களை, மாணவர்களை பெரிதும் ஆட்கொண்ட- தமிழர் விழாக்களில் பரிசளிக்கும் நூலாக மாறிய மு.வ.வின் புகழ்பாடும் நூற்றாண்டு மலர் கருத்துக் கருவூலமாக வெளிவந்துள்ளது. மு.வ. குறித்து துணைவேந்தர்கள், பேராசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள், தமிழ் சான்றோர்கள் எழுதிய சொல்லோவியங்கள் மலர் நெடுக மணம் வீசுகிறது. இன்றும் தமிழ்ச் சமூகத்தை ஆற்றுப்படுத்தும் ஆற்றல் மிக்கது மு.வ. எழுத்துக்கள். அவர் 13 நாவல்கள், 2 சிறுகதைத் தொகுப்பு, 6 நாடக நூல்கள், 2 சிந்தனைக் கதைகள், 11 கட்டுரை நூல்கள், 24 இலக்கிய விருந்துகள், மேலும் இலக்கிய வரலாறு, மொழியியல் நூல்கள், மொழி பெயர்ப்பு நூல்கள் என விரிந்த பரப்பில் தடம் பதித்தவர். இவை குறித்து புதிய இளைஞர்கள் அறிய இம்மலர் முன்னோட்டமாக அமையும். மு.வ.வை போற்ற முன்னெடுத்துச் செல்ல இம்மலர் நிச்சயம் வாகனமாகும்.