கவி அரங்கன் கவிதைகள். ஆசிரியர்: கவி அரங்கன், வெளியீடு: தூரிகை பதிப்பகம், 75, காத்தான் தெரு, பெரிய நத்தம், செங்கல்பட்டு-2. பக்.272. விலை: ரூ.200/-

மரபுக் கவிதைகளையும் புதுக் கவிதைகளையும் குழைத்த தொகுப்பு இது. மதிப்புரையில் தணிகைச் செல்வன் சொல்வது போல தமிழியம், தமிழீழம், இந்தியம், தலித்தியம், பெண்ணியம், மானுடம், அறிவியல், உழைப்பியல், சூழலியல் போன்ற கருத்தாக்கங்களை ஏந்திய கவிதைகளின் தொகுப்பே இது. “நரகலை வாயில் திணிக்கும் / திண்ணி யத்து மண்ணில் / எரிமலை வெடிக்கும்” என சீறும் கவிதை நன்று. “இமயத்தின் எதிர்முனையாய் / எழுந்து வரும் லெமூரியம் /எழுந்தவுடன் இங்கிருந்து /இடம் பெயரும் ஆரியம்” இந்த வரிகள் உணர்ச்சியை கொம்பு சீவும். ஆனால் யதார்த்தத்தை பார்க்க மறுக்கும். பொதுவாக இவர் கவிதைகளில் இவரின் அரசியல் பார்வையில் ஏற்பட்டிருக்கிற சிக்கல்கள் பட்டுத் தெறிப்பதைக் காண முடிகிறது. விவாதிக்கவேனும் இவர் கவிதைகளை வாசிப்பது நல்லது.