பரமக்குடி துப்பாக்கிச் சூடு – பொது விசாரணை அறிக்கை, வெளியீடு: பரமக்குடி துப்பாக்கிச் சூடு எதிர்ப்பு நடவடிக்கைக் குழு சார்பாக மக்கள் கண்காணிப்பகம், 6, வல்லபாய் சாலை, சொக்கிக் குளம், மதுரை-625 002. பக். 544 விலை: குறிப்பிடப்படவில்லை

பரமக்குடி துப்பாக்கிச்சூட்டின் ரணம் இன்னும் ஆறவில்லை. அரசு கண் துடைப்பு விசாரணை நாடகம் நடத்துகிறது. சிபிஐ விசாரணை வேண்டுமென்பது ஜனநாயக சக்திகளின் கோரிக்கை. இந்நிலையில் முன்னாள் நீதியரசர் ஹெச். சுரேஷ் தலைமையில் பல்வேறு அறிஞர்கள், மனித உரிமைப் போராளிகள், சமூக ஆர்வலர்கள் சேர்ந்து பொது விசாரணை நடத்தி ஒரு ஸ்கேன் ரிப் போர்ட்டாக இந்த அறிக்கையை தந்துள்ளனர். இது நியாயத்துக்காகப் போராடும் அந்த மக்களின் கை ஆயுதமாகும். “உண்மையை அறிய முற்படுவோருக் கும் எதிர்காலத்தில் பிணக்குகளைத் தவிர்த்து சமூக நல்லிணக்கம் விரும்புவோர்களுக்கும் இவ்வெளியீடு மிக உதவியாக இருக்கும் என்பது திண்ணம்.” என முன்னுரையில் கூறியிருப்பது மிகையல்ல உண்மை என்பதை இதனை ஊன்றிப் படிப்பவர்கள் நிச்சயம் உணர்வர்.