சூபி:விளிம்பின் குரல், ஆசிரி யர்:ஹெச்.ஜி.ரசூல், பாரதி புத் தகாலயம், 421,அண்ணா சாலை,தேனாம்பேட்டை, சென்னை-600018. பக்:80, விலை:ரூ.45/-

பாதுகாப்பு வேண்டுமெனில் கரையில் நில், புதையல் வேண்டுமானால் கடலுக்குள் செல் என்று கவிஞர் ஷா அதி சொல்வதைப் போல, சூபி ஞானிகளை அறிய அக்கடலுக்குள் குதிக்க இந்நூல் நிச்சயம் தூண்டுதலாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.  சுருங்கச்சொல்வதுஒருகலை. அது எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. சூபிகள் அப்படிப்பட்டவர்கள். சூபிகளைப் பற்றி ரசூல் சுருக்கமாக எழுதியிருப்பினும் மிகுந்த அடர்த்தியான செய்திகளை உள்ளடக்கியது. ஆண் சூபிகளை மட்டுமல்ல பெண் சூபிகளையும் இந்நூல் அறிமுகப்படுத்துகிறது.  மதத்தினுள் புகுந்து அதன் உள்ளடக்கத்தைக் கொண்டு வரவேண்டும் என்கிறார் நூலாசிரியர்.  மதச்சார்பின்மையை நோக்கிய பயணத்தில் மதநல்லிணக்கமும் ஒரு கட்டமாகும்.  இந் நூலில் பேசப்பட்டப் பொருள்களை உள்வாங்குவதும் இன்றைய காலத்தின் தேவையாகும்.