வெள்ளை மொழி
அரவாணியின் தன் வரலாறு  ரேவதி
வெளியீடு: அடையாளம், 1205/1, கருப்பூர் சாலை, புத்தாநத்தம்-621310. பக்கங்கள்: 272 விலை: 200

ரவாணிகள் என்றும் திருநங்கை கள் என்றும் அழைக்கப்படுபவர் களின் உடல் மற்றும் மனம் சார்ந்த உணர்வுகளையும் வாழ்வியல் பிரச்னை களையும் வரிவரியாக, வலியுடன் விவரிக்கும் புத்தகம். ”உங்க வீட்ல இப்படி ஒருத்தர் பிறந்தா என்ன பண்ணுவீங்க?” என்று இந்தப் புத்தகம் ஆங்காங்கே எழுப்பும் கேள்வி நம்மைப் பரிசோதித்துக்கொள்வதற்கானது. நாமக்கல்லில் பிறந்த துரைசாமி, தன்னை ஒரு பெண்ணாக உணர்ந்து ரேவதி என்று மாற்றிக்கொள்ளும் தருணத்தில் இருந்து தொடங்கும் அவமானத்தின் கசப்பு இந்தப் புத்த கத்தின் அடுத்தடுத்த பக்கங்களில் ஆங்காங்கே படிந்துகிடக்கிறது. நாமக்கல், மும்பை, ஹைதராபாத், பெங்களூரு என வெவ்வேறு நிலப்பரப்புகளில் வாழ வேண்டிய நிர்பந்தம் கொண்ட ரேவதி, எல்லா இடங்களி லும் மீண்டும் மீண்டும் சந்திப்பது அவமானம், வன்முறை, ஏமாற்றம். இதனூடாகச் சில காதல்களும் அன்பு ததும்பும் மிகச் சொற்ப மனிதர்களும். இஜரா (திருநங்கை), குரு, சேலா (சீடர்), பாவ்படுத்தி (குருவுக்குச் செய்யும் மரியாதை), தந்தா (பாலியல் தொழில்), அமாம் (திருநங்கைகள் நடத்தும் குளியலறை) எனத் திருநங்கைகளின் சமூகக் கட்டமைப்பு மற்றும் சம்பிரதாயங்களினூடாகப் பயன்படுத்தப்படும் வார்த்தைகள் நமக்குப் புதியவை!