துபாய்: துபாயில் மஸ்னவி ஷரீப் இரண்டாம் பாகத்தின் தமிழாக்க வெளியீட்டு நிகழ்ச்சி நாளை (8ம் தேதி)மாலை 7.30 மணிக்கு நாசர் சதுக்கத்தின் அருகிலுள்ள லேண்ட்மார்க் ஹோட்டலில் நடைபெற இருக்கிறது.

ஆத்ம ஞானி அல்லாமா ஜலாலுத்தீன் ரூமி( ரஹ்மத்துல்லாஹி அலைஹி) அவர்களின் ஞானக் கருவூலம் மஸ்னவி ஷரீப் பார்ஸி மொழியிலானது. அதன் தமிழாக்கத்தின் இரண்டாம் பாகம் நாளை வெளியிடப்படுகிறது.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக ஈமான் அமைப்பின் தலைவரும், ஈடிஏ அஸ்கான் ஸ்டார் குழும மேலாண்மை இயக்குநருமான அல்ஹாஜ் செய்யது எம். ஸலாஹுத்தீன், அல்ஹாஜ் பசிபிக் மீரான், அல்ஹாஜ் ஹபீப் முஹம்மது ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

‘மஸ்னவி ஷரீப் ஒரு பார்வை’ எனும் தலைப்பில் முஹிப்புல் உலமா அல்ஹாஜ் ஏ. முஹம்மது மஃரூப் உரை நிகழ்த்துகிறார்.

இந்த நிகழச்சிக்கான ஏற்பாடுகளை ஹழ்ரத் ஹாஜா பஹீமுல்லா ஷா அவர்களின் அமீரக அன்பர்கள், துபாய் சுன்னத் வல் ஜமாஅத் ஐக்கியப் பேரவை, பன்னாட்டு இஸ்லாமிய இலக்கியக் கழகம்–துபாய் மற்றும் சென்னை பஹீமிய்யா டிரஸ்ட் ஆகியவை இணைந்து செய்துள்ளன.

பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சி குறித்து மேலும் தகவல் அறிய விரும்புவோர் 050 568 7296 / 050 553 43 64 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.