மதுரை: மதுரை உயர் நீதிமன்றத்தில் உள்ள பெண் வழக்கறிஞர்கள் சங்கத்தில் கவிஞர் இரா.இரவியின் ‘சுட்டும் விழி’ நூல் அறிமுக விழா நடைப்பெற்றது.

மதுரை உயர் நீதிமன்றத்தில் உள்ள பெண் வழக்கறிஞர்கள் சங்கத்தில் கவிஞர் இரா.இரவியின் ‘சுட்டும் விழி’ நூல் அறிமுக விழா நடைபெற்றது. பெண் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவி ஜே.நிஷா பானு வரவேற்புரை ஆற்றினார்.

நீதியரசர் கே.என்.பாஷா நூலை அறிமுகம் செய்து வைத்து தனக்குப் பிடித்த ஹைக்கூ கவிதைகளை மேற்கோள் காட்டி வாழ்த்திப் பேசினார். அவர் நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவிக்கு நினைவுப் பரிசு வழங்கிப் பாராட்டினார்.

‘சிரிப்பும் சிந்தனையும்’ என்ற தலைப்பில் தொலைக்காட்சிப் புகழ் விளாங்குடி விநாயக மூர்த்தி உரையாற்றினார். நீதியரசர் வி.ராம சுப்ரமணியன் ‘சுட்டும் விழி’ நூலைப் பெற்றுக் கொண்டு, எது தரமான நகைச்சுவை என்று விளக்கமாக உரை நிகழ்த்தினார். இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை வழக்கறிஞர் கு.சாமிதுரை செய்திருந்தார்.

மதுரை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் பலரும் இந்த விழாவில் கலந்து கொண்டனர். முடிவில் சங்கத்தின் செயலாளர் ஜே.ஆனந்தவள்ளி நன்றி கூறினார்.