கவிஞர் வைரமுத்துவின் இளையமகன் கபிலன் வைரமுத்து எழுதிய உயிர்ச்சொல் எனும் நாவலை இயக்குநர் கே.பாலசந்தர் வெளியிட்டார்.

குழந்தை பெற்றதும் சில பெண்களுக்கு ஏற்படும் மன அழுத்தம்- தமிழ்நாட்டில் ஒரு சமூக மாற்றத்திற்காக செயல்படும் இளைஞர்களின் முயற்சி இந்த இரண்டையும் அடிப்படையாகக்கொண்டு இந்த நாவல் எழுதப்பட்டிருக்கிறது.

முதல் முறையாக ஒரு நாவல் வெளிவருமுன் அதற்கான ஒரு முன்னோட்டப் பாடல் எழுதி இசையமைக்கப்பட்டு கடந்த மாதம் வெளியிடப்பட்டது. இந்த பாடலைக் கேட்டுவிட்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கபிலனை செல்பேசியில் அழைத்து “கண்ணா- பாட்டு ரொம்ப நல்லா இருந்துச்சு” என்று மனமார வாழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

இயக்குனர் பாலசந்தர் நாவலை வெளியிட்டபோது, ரம்யா கபிலன், கபிலன் வைரமுத்து, ஒருங்கிணைப்பாளர்கள் உமா, ஜனார்த்தனன், கிழக்கு பதிப்பகம் பத்ரி சேஷாத்ரி ஆகியோர் உடனிருந்தனர்.

www.uyirsol.com என்ற தளத்தில் நாவல் பாடலையும் நாவல் தொடர்பான செய்திகளையும் பெறலாம்.