தனது தரப்பு வாதங்கள், நியாயங்களை விளக்கியும், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மறைக்கப்பட்ட உண்மைகளையும் விளக்கி பேரறிவாளன் எழுதிய கடிதங்கள் உள்ளிட்டவற்றின் தொகுப்பு அடங்கிய நூலின் இந்தி மொழியாக்கம் சென்னையில் வெளியிடப்பட்டது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் ஏ.பி.பரதன் நூலை வெளியிட்டார். மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, சிபிஐ தேசியச் செயலாளர் டி.ராஜா, பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நூலின் முதல் பிரதியை தெற்காசியாவில் மரண தண்டனை ஒழிப்பு இயக்கத்திற்கான கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் ஜக்மோகன் சிங் பெற்றுக் கொண்டார்.

இந்த நூலில் ராஜீவ் கொலைச் சம்பவங்கள் குறித்த தொகுப்பு, உண்மைகள், அந்த வழக்கு கையாளப்பட்ட விதம், பேரறிவாளனின் கடிதங்கள், நீதி கோரும் விண்ணப்பம் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன.

நன்றி: தட்ஸ்தமிழ்