சென்னையில் கடந்த 04.09.11 அன்று ‘முள்ளிவாய்க்கால் சாட்சி’ என்ற புத்தகம் வெளியிடப்பட்டது. புத்தக வெளியிட்டு விழா திரு அன்பரசன் தீனதயாளன் மற்றும் எழில் சுரேசு அவர்களின் திருமண நிகழ்வோடு சேர்ந்து நடைபெற்றது. நோர்வேயிலும் லண்டனிலும் ஏற்கனவே வெளியிடப்பட்ட இப்புத்தகத்தை தமிழகத்தில் மருத்துவர் எழிலன் தலைமையில் இயங்கும் இளைஞர் இயக்கம் வெளியிட்டத்து. திருமண விழாவிற்கும் இப்புத்தக வெளியீட்டு விழாவிற்கும் பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி அவர்கள் தலைமை தாங்கினார்.
முள்ளிவாய்க்காலில் இறுதி வரை நின்று வெளியேறிய சுருதி என்ற ஊடகவியலாளர் எழுதிய இப்புதக்கத்தை உணர்ச்சி கவிஞர் காசி ஆனந்தன் வெளியிட பாவலர் அறிவுமதி பெற்றுக்கொண்டு புத்தகத்தின் ஆய்வுரையை நிகழ்த்தினார். சென்னையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டில் வரவேற்புரையை நோர்வே ஈழத்தமிழர் அவையின் பிரதிநிதி திரு.விஜய்சங்கர் அசோகன் அவர்களும் புத்தக அறிமுக உரையினை மருத்துவர் எழிலன் அவர்களும் நிகழ்த்தினர். திருமண மற்றும் புத்தக வெளியீட்டு இணைந்த விழாவில் தொகுப்புரையினை மதிமுகவின் சேலம் அசோகன் நிகழ்த்தினர்.

திருமண நிகழ்வும் புத்தக வெளியீடும் சென்னையில் இருக்கும் மடிப்பாக்கம் சுமங்கலி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இவ்வினைந்த நிகழ்வில் பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச்செயலார் விடுதலை ராசேந்திரன், உணர்ச்சி கவிஞர் காசி ஆனந்தன், பாவலர் அறிவுமதி, பேராசிரியை சரசுவதி, மருத்துவர் எழிலன், பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த அன்பு தனசேகரன், சோலை மாரியப்பன், ரஷீத் கான் , மதிமுக இலக்கிய அணி சேலம் அசோகன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

நோர்வே ஈழத்தமிழர் அவையும் நோர்வே நாட்டின் நாடு கடந்த அரசாங்கத்தின் பிரதிநிதிகளான திரு. சிவகணேசு. திரு. முரளி, திருமதி ஜெயசிறி அவர்கள் இணைந்து வெளியிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.