நூல்:ரசிகமணி டி.கே.சி கடிதங்கள்

ஆசிரியர்:தீப.நடராஜன்

விலை: ரூபாய் 600/-

வெளியீடு: உயிர்மை பதிப்பகம்

பக்கம்:960

புத்தக மதிப்புரை:

தமிழ் இலக்கியங்கள் மீது ரசனை வாசிப்பை முன்வைத்தவரும் அத்தகைய ரசனை முறையைக் குழுவாக வளர்ப்பதற்காகவே ‘வட்டத் தொட்டி’ என்னும் அமைப்பை நிறுவியவருமான டி.கே.சிதம்பரநாதன் எழுதியுள்ள கடிதங்களின் தொகுப்பு. ராஜாஜி அந்தக் காலகட்டத்தில் முக்கியமான அரசியல் தலைவராக இருந்தபோதும், டி.கே.சி. அவரிடம் முத்தொள்ளாயிரம் பற்றியும் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை பற்றியுமே பேசுகிறார் என்பது சுவாரஸ்யமானது.

அக்காலத்திய இலக்கிய உரையாடல்களை அறிந்துகொள்வது ஒருபுறம் என்றால், ரஜா (விடுமுறை) போன்ற அந்தக் காலத்தில் புழங்கப்பட்ட சொற்களை அறிவது இன்னொரு சுவாரஸ்யம். அட்டையில் 27 பேருக்கு எழுதப்பட்ட கடிதங்களின் தொகுப்பு என்று இருக்க, புத்தகத்துக்குள் 26 கடிதங்களே இருக்கின்றன. விடுபட்ட அந்த ஒன்று எது?