புத்தகத்தின் பெயர் : காலந்தோறும் கல்வி
ஆசிரியர் : என்.மாதவன்
வெளியீடு : புக்ஸ் பார் சில்ரன்
விலை : ரூ.45/-
பக்கம் :

புத்தக மதிப்புரை:

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் ஆர்வலர், தமிழ்வழி கல்வியை போற்றும் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் என். மாதவன், அறிவியல் இயக்கத்தின் கல்விப்பணிகளில் கிடைத்த அனுபவத்தை புத்தகமாக ஆக்கியுள்ளார். கல்வி முறையின் வரலாறு குறித்து சாதாரண வாசகர்களுக்கு தெரிவிக்கும் விதமாக நூலை எழுதியுள்ளார். முடியாட்சியில் கல்வி எப்படி இருந்தது என்று துவங்கி மாதிரியான கல்வி சீர்த்திருத்தங்கள், தொழிற்புரட்சியில் விளைந்த கல்விப்பணிகள், இந்தியாவில் புராணகாலத்தில் கல்விபற்றி இருந்த கருத்துக்கள் ஆங்கிலேய ஆட்சிக்கு பிறகு கல்வியில் நடந்த மாற்றங்களை விவாதித்து, பிரச்சனைகளுக்கான தீர்வு பற்றிய முன் வைத்தல்களோடு நிறைவு பெறுகிறது நூல்.

சமூக அக்கறையுள்ள ஒவ்வொரு மனிதனும் வாசிக்க வேண்டிய நூல்.