புத்தகத்தின் பெயர் : என்ன இல்லை இந்து மதத்தில்?
ஆசிரியர் : கவிஞர் தெய்வச்சிலை
வெளியீடு : சாருப்பிரபா பப்ளிகேஷன்ஸ்
விலை : ரூ.100/-
பக்கம் :256

புத்தக மதிப்புரை:

வளர்ந்து வரும் விஞ்ஞான அறிவோடு ஒட்டிக்கொள்ள உலகம் பூராவும் மதங்கள் இளித்துக் கொண்டு வருகின்றன. இந்திய இளிப்புதான் இந்த நூல். உலகத்திலேயே அதிகமான ஏழைகளையும், நோஞ்சான் குழந்தைகளையும், படிக்காதவர்களையும் கொண்டதாக இன்றைய இந்தியா தாழ்ந்து கிடக்கிறது. இந்து மதம் இதற்கான பிரதான குற்றவாளியில்லையா? சமூகத்தின் ஒன்மைக்காக தன்னை தியாகம் செய்ய மனிதனை தயார் செய்யாத ஒரு மதம், “மனிதனும் தெய்வமும் ஒண்ணு’’ என வாய்ச் சவடால் அடிப்பதை நாம் நம்ப வேண்டுமா?.

இந்து மதத்தில் முற்போக்கு அம்சங்கள் என்று ஏதாவது இருக்குமானால், அவை உழைக்கும் மக்களின் வழிபாட்டு முறைகளில் இருந்து இந்து மதம் திருடிக்கொண்ட முக மூடியே!

தமிழகத்தில் இந்து மதத்தின் முதுகெலும்பில் ஒரு விரிசல் முற்போக்கு சக்திகளால் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதனை சரிசெய்து கொள்வதற்கான எண்ணற்ற முயற்சிகளில் இந்த நூலும் ஒன்று. மோதி முறிக்க வேண்டிய பழைமை கருத்துகளின் தொகுப்பாகவே இந் நூல் அமைந்துள்ளது.