புத்தகத்தின் பெயர் : வி.ஏ.ஓ. தேர்வு, மாதிரி வினா-விடை
ஆசிரியர் :ம.கா.செந்தில்குமார், எஸ். காயத்ரி
வெளியீடு : விகடன் பிரசுரம்
விலை : ரூ230./-
பக்கம் :

புத்தக மதிப்புரை:

போட்டிகள் நிறைந்த இந்த உலகில், பொறுப்பான வேலைகளுக்கு அறிவுக்கூர்மையானவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது நடைமுறை. அதன்படி தமிழ்நாடு அரசுப் பாணியாளர் தேர்வாணையமும், அரசுத்துறைகளுக்கான பணிகளுக்கு பல்வேறு போட்டித் தேர்வுகளை, வேலையின் தரத்திற்கு ஏற்ப நடத்துகின்றது. அந்த வகையில் ‘வி.ஏ.ஓ.’ என்ற கிராம நிர்வாக அலுவலர்களுக்கான தேர்வு 2007-க்குப் பிறகு 2011 -ல் நடைபெற உள்ளது. 10 ஆம் வகுப்பு தேர்ச்சியை அடிப்படையக் கல்வித் தகுதியாகக் கொண்ட இப்போட்டித தேர்வில், மொத்தம் 200 வினாக்கள் கேட்க்கப்படும். முதல் 100 வினாக்கள் ‘பொது அறிவு’ பிரிவில் இருந்தும், அடுத்த 100 வினாக்கள் ‘பொதுத் தமிழ்’ பிரிஇலிருந்தும் கேட்க்கப்படும். ஒவ்வொரு வினாவும் தலா ஒன்றரை மதிப்பெண் கொண்டவை. அதன்படி வரலாற உமுதல் அறிவியல், பொருளாதாரம் வர அனைத்துப் பாடப் பிரிஉகளில் இருந்தும் மாதிரி வினா- விடைகள் சிறந்த முறையில் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. தவிர, இங்கு முன் நடந்த பல்வேறு தேர்வுகளில் (டி.என்.பி.எஸ்.சி – குரூப் -4 உள்பட) கேட்கப்பட்ட பொதுஅறிவு, மற்றும் பொதுத் தமிழ் உள்ளிட்ட வினாத்தாள்களும், அதற்குரிய விடைகளும் தொகுப்பட்டுள்ளன. சுமார் 495 பக்கங்களுக்கு மேல் விரியும் இந்தப் பொது அறிவு வினா-விடை நூல், இத்தேர்வு எழுதுபவர்களுக்கு மட்டுமின்றி பொது அறிவு வேட்கை கொண்டவர்களுக்கும் பயன்தரத்தக்கது.

   Send article as PDF