புத்தகத்தின் பெயர் : ரிக்,யஜூர், சாம வேதங்கள்
ஆசிரியர் :ஆசிரியர்: பி. குருபிரியா
வெளியீடு :கடலங்குடி பப்ளிகேஷன்ஸ்
விலை : ரூ.175/-
பக்கம் :

புத்தக மதிப்புரை:

உலகில் உள்ள முக்கிய மதங்களுக்கு எல்லாம் அடிப்படை, அவற்றின் வேதங்களே. அந்த வேதங்களின் நோக்கம் எல்லா மக்களுக்கும் வாழ்க்கை நன்றாக அமைய வேண்டும்; அனைவரும் கல்விமான்களாகவும், பிரம்ம ஞானம் பெற்றவர்களாகவும் விளங்க வேண்டும் என்பதே! அந்த வகையில் நம நாட்டில் தோன்றிய ஹிந்து மதம் ரிக், யஜூர், சாம, அதர்வண என நான்கு வேதங்களைக் கொண்டது. இவை யாராலும் உண்டாக்கப்பட்டவை அல்ல என்றும், பஞ்ச பூதங்களிலிருந்து உருவான சபதங்களை காதால் கேட்டு உணர்ந்த ரிஷிகள், அவற்றை மந்திரங்களாக சிஷ்யர்களுக்கு கூறப்பட்டவையே என்றும், இந்த மந்திரங்களின் தொகுப்பே வேதம் என்றும் விளக்கப்படுகிறது. இந்த வேத மந்திரங்களை ஓதும் போது உருவாகம் சப்த அலைக்கு எத்தகைய சக்தி உள்ளது என்பதையும் இந்நூலில் ஆசிரியர் கூறியுள்ளார். அதர்வண வேதம் தவிர, மற்ற மூன்று வேதங்களின் தமிழாக்கத்தை சுமார் 425 பக்கங்களுக்கு மேல் எளிய தமிழில், பாமரனுக்கும் புரியும் வகையில் யதார்த்தமான பாணியில் தனித் தனியாக எடுத்துரைத்துள்ளது சிறப்பானது.