புத்தகத்தின் பெயர் :வால்மீகி ராமாயணம்
ஆசிரியர் :அ.லெ. நடராஜன்.
வெளியீடு :பழனியப்பா பிரதர்ஸ், கோனார்மாளிகை
விலை : ரூ.195/-
பக்கம் :

புத்தக மதிப்புரை:

இரு பெரும் இதிகாசங்களில் ஒன்றான ராமாயணம், வால்மீக முனிவரால் ஸம்ஸ்க்ருத்த்தில் இயற்றப்பட்டது. மனித வாழ்க்கை, ஒழுக்கநெறியுட் கூடியதாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்தவே திருமால், ஸ்ரீராமராசு அவதாரம் எடுத்து, ஒழுக்கம் தவறிய ராவணனை தண்டித்த கதையே ராமாயணம். இதை பால காண்டம், சுந்தர காண்டம், கிஷ்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம், உத்தர காண்டம் – ஏழு கண்டங்களாக விவரித்து வால்மீகி இயற்றியிருந்தாலும்,ராமாயணக்கதை இயல்பாகவே ராமரின் பட்டாபிஷேகத்துடன் முடிவதால், இக்கதையைச் சொல்பவர்கள் அதற்கு மேல் தொடராமல் நிறுத்திக் கொள்வது வழக்கம். அந்த வகையில் இந்த நூலிலும் ஆசிரியர் உத்தர காண்டத்தைச்சேர்க்கவில்லை. சுமார் 550 பக்கங்களுக்கு மேல், தெள்ளிய நீரோட்டம் போல், மூல நூலாகிய வால்மீக ராமாநணத்தை, உரைநடையாக எளிய தமிழில் தந்துள்ள சிறப்பானது.