புத்தகத்தின் பெயர் :புரட்சிப் பாடகர் கத்தார்… மறக்க முடியுமா?
ஆசிரியர் :
வெளியீடு :
விலை : ரூ./-
பக்கம்

புத்தக மதிப்புரை:

கம்பீரமான கணீர்குரல்; நரம்பை அதிரவைக்கும் பறையொலி; நம்மவர் என ஈர்க்கும் எளிமையான தோற்றம்; சிந்தனையை சூடேற்றும் பாடல்கள்… இப்படி வர்ணித்துக் கொண்டே போவதைவிட `கத்தார்’ என ஒற்றைச் சொல்லில் அடக்கிவிடலாம். நெருப்புக்கும் கத்தாருக்கும் அறிமுகம் அவசியமில்லை. இயல்பான தகிப்பே இருப்பைக் காட்டும். கத்தார் என்றாலே புரட்சி என்றே பொருள். கும்மிடி விட்டல் ராவ் என்ற சாதாரண மனிதர் -இன்னும் உறக்கம் கலையாத ஆந்திர மாநில உள் கிராமத்து சேரியிலே பிறந்தவர். தீப்பிளம்பாய் ஆன கதையை பிரகாஷ் உரைஇடையிட்ட பேட்டியாய் நக்கீரனில் தொடராக வெளியிட்டார். இப்போது நூலாக வெளிவந்துள்ளது. கத்தார் சார்ந்துள்ள அரசியல் இயக்கம் மீது நமக்கு உடன்பாடில்லை. அது சீரழிவுப் பாதை என்பதை வரலாறு மீண்டும் மீண்டும் காட்டி விட்டது. அது ஒரு புறம் இருந்தாலும்; கத்தாரின் அர்ப்பணிப்பு மிக்க கலைப் பணி நாம் கட்டாயம் அறிய வேண்டிய ஒன்றே!