புத்தகத்தின் பெயர் :தமிழக வரலாற்றில் தடம் பதித்த தோழர்கள்
ஆசிரியர் : வ.மோகன கிருஷ்ணன்
வெளியீடு :தியாக தீபங்கள்
விலை : ரூ.60/-
பக்கம் 208

புத்தக மதிப்புரை:

“கற்பனைப் படைப்புகளை யார் வேண்டுமானாலும் எழுதிவிடலாம்.ஆனால் வரலாறு சார்ந்த உண்மைத் தகவல்கள் பதிவு செய்யப்படாமல் போகுமானால் அது எதிர்காலத்திற்குப் பெரிய இழப்பு. இந்நூல் நிகழ்கால மற்றும் எதிர்கால இளைஞர்களுக்கு நான் பரிந்துரைக்கும் கடந்த காலத்தைப் பற்றிய ஓர் ஆவணம்” என்கிறார் திருப்பூர் கிருஷ்ணன். சின்னியம் பாளையம் தியாகிகள், ஏ.எல்.அய்யாக் கண்ணு, கே. எஸ்.உத்தமலிங்கம், டாக்டர் கமலாகிருஷ்ணன், கமலாராமசாமி, எம்.எஸ்.கணபதி, கந்தசாமி, தியாகு (எ) தியாக ராஜன், ஆர். எச்.நாதன் (எ) கலாசி நாதன், ஆர். கே. பாண்டுரங்கன், மா.முத்துசாமி, மங்களசாமி, மீனா கிருஷ்ணசாமி, டாக்டர் எஸ்.ராம கிருஷ்ணன், ஆர்.கே. கண்ணன், கு.வெள்ளியங்கிரி, வைத்தியலிங்கம், கே.எஸ்.செல்வராஜ், எம். மாசிலாமணி என மலரின் தியாகச் சுவடுகளை பதிவு செய்துள்ள இந்நூல் அவசியமான வரலாற்றுப் பதிவு.