புத்தகத்தின் பெயர் : கருக்கு
ஆசிரியர் : பாமா
வெளியீடு :பாரதி புத்தகாலயம்
விலை : ரூ.35/-
பக்கம் :96

புத்தக மதிப்புரை:

1992ல் எழுதப்பட்டு, அதிர்ச்சி அலைகளை உருவாக்கிய நாவலின் ஐந்தாம் பதிப்பை பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ளது. துறவு வாழ்க்கையிலிருந்து வெளிவந்து எழுதத் தொடங்கிய பாமா, சொந்த மண்ணில் மட்டுமல்ல, ஆண்டாள் சந்நிதியில் கூட அதுதான் கதி என அனுபவ வரியை பதிவு செய்த நாவல் இது. இதில் அந்த மதம் இந்த மதம் என்ற வேறுபாடு இல்லை என்கிறார் நூலாசிரியர் “பனை மட்டையின் இருபுறமும் இரம்பம் போல இருக்கும் கருக்கு நம்மை அறுத்துவிடும்”. தலித் மக்கள் பல்வேறு நிலைகளில் அடக்கப்பட்டு, அறுக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு வாழும் நிலைமையைக் குறிக்கவும்; தங்களிடம் இயல்பாக உள்ள போர்க்குணத்தை இழந்து விடாமல் தங்களை அடிமைப்படுத்தும் தடையை உடைத்தெறிந்து தளைகளை அறுத்தொழித்து விடுதலை பெற வேண்டும் என்ற ஆசையினாலும் புத்தகத்திற்கு ‘கருக்கு’ என்று பெயரிட்டதாகக் கூறுகிறார் ஆசிரியர்.