புத்தகத்தின் பெயர் :வரலாற்று நோக்கில் ஜோசப் ஸ்டாலின் வாழ்வும் காலமும்
ஆசிரியர் : எம். ஆர். அப்பன்
வெளியீடு :அலைகள் வெளியீட்டகம்
விலை : ரூ.230/-
பக்கம் :464

புத்தக மதிப்புரை:

2003 ஆம் ஆண்டு முதற்பதிப்பு வெளியானது, 2009 இறுதியில் மறுபதிப்பு வெளியாகி உள்ளது. நூலின் தேவை அவ்வளவு முக்கியமானது. ஸ்டாலினை அவதூறு செய்யும் அக்கிரமத்தை முதலாளித்துவ ஊடகங்கள் நிறுத்துவதே இல்லை. எனவே ஸ்டாலினின் வாழ்வையும் காலத்தையும் மறுபடியும் படிக்க வேண்டிய அவசியம் உள்ளது. இந்நூலை எழுதிய எம். ஆர். அப்பனும் மறைந்துவிட்டார். அவரது எழுத்துகள் இன்னும் வீரியமுடன் வாதிடுகிறது. ஸ்டாலின் தவறு செய்யாதவர் அல்ல. அவர் வாழ்ந்த காலத்தின் வார்ப்பு அவர். அவரது சாதனைகள் தவறுகளை விட பல மடங்கு பெரிது. அவர் மாமனிதர். இதனை நிறுவுகிறது இந்நூல். அப்பன் ஆங்கிலத்தில் எழுதியதை மயிலை பாலு தமிழாக்கம் செய்திருக்கிறார். ஸ்டாலின் வாழ்ந்த காலத்தோடு உரசிப் பார்த்து எழுதப்பட்ட நூல். இன்றைக்கும் படிக்க வேண்டிய நூல் வரிசையில் இடம் பெறும் தன்மையுடையதாகத் திகழ்கிறது.