புத்தகத்தின் பெயர் :கரைசேர்க்கும் உயிர்த்துடுப்பாய். . . என்.டி.வானமாமலை- மூத்த வழக்கறிஞர்
ஆசிரியர் :எஸ்.அருணாச்சலம்
வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்
விலை : ரூ.442/-
பக்கம் :88

புத்தக மதிப்புரை:

பூணூலை கழற்றி எறிந்து பொதுவுடைமை இயக்கத்தில் இணைந்து மக்களுக்காக வாழ்நாளெல்லாம் வாதாடிய வழக்கறிஞரின் வாழ்க்கை வரலாறு இது. “பல வரலாறுகளின் ஆவணமாக விளங்குகிறது இந்நூல்.

நாங்குநேரி ஜீயர் மடம், உத்திராபதி மடம் ஆகியவற்றுக்கு எதிரான விவசாயிகள் போராட்டம், நாட்டைக் குலுக்கிய நெல்லைச் சதிவழக்கு, நீதிபதியையே திணறச் செய்த ரயில்வே தொழிலாளர்களின் வேலை நிறுத்த வழக்கு எனத் தமிழகத்தை குலுக்கிய பல முக்கியமான வழக்குகளில் என். டி.வி. காட்டிய திறமைகளை அவரின் சார்பு நிலைகளை சிறப்பாக வெளிப்படுத்துகிறார் என்கிறார் பொன்னீலன். சட்டம் என்பது மனிதனில் இருந்து பிரிந்து கிடக்கிற ஒற்றைப் பரிணாமம் கொண்டது அல்ல. இந்நூல் இளம் வழக்கறிஞர்கள் கட்டாயம் வாசிக்க வேண்டிய புத்தகம். அனைவரும் படிக்க வேண்டிய நூல்.