புத்தகத்தின் பெயர் :சோதனைக் கூடம்
ஆசிரியர் : ரவீந்திரநாத் தாகூர்
வெளியீடு :நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்
விலை : ரூ.500/-
பக்கம் :96

புத்தக மதிப்புரை:

உலகப் புகழ் பெற்ற பரிசு பெற்ற நூற்றுக்கும் மேற்பட்ட நாவல்களை மொழி பெயர்த்த சுரா இந்நூலையும், மொழி பெயர்த்துள்ளார். தமிழ் மொழிக்கு அவர் செய்யும் சேவை தொடரட்டும். தாகூர் என்றதும் கவிதைகள் மட்டுமே நினைவுக்கு வரும் தமிழ்ச் சூழ்நிலையில் அவரின் இதர படைப்பு முயற்சிகள் அனைத்தும் தமிழில் வரும் நாள் எந்நாளோ? சுரா முயல்வாராக! சோதனைக் கூட்டம் வித்தியாசமான கதைக்களம். உரையாடல் மூலமே கதை முழுவதும் நகர்த்தப்படும் பாங்கு, நுட்பமான சொற்பிரயோகங்கள் மனவோட்டங்களை பிரதிபலிக்கும் சித்தரிப்புகள் இந்த நாவல் தமிழ் உலகுக்கு ஒரு நல்வரவு. முற்றிலும் வித்தியாசமான கதைக் கருவை எடுத்துக் கொண்டு, அதை இறுதி வரை எவ்வளவு கூர்மையாகவும், ஆழமாகவும் கொண்டு செல்கிறார் என்று பார்க்கும் போது தாகூர் மீது நமக்கு மிகப் பெரிய மரியாதை உண்டாகியது என்கிறார் சுரா.