புத்தகத்தின் பெயர் :சிந்தனை களஞ்சியம்
ஆசிரியர் : ஆர். பார்த்த சாரதி
வெளியீடு :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
விலை : ரூ.85/-
பக்கம் :192

புத்தக மதிப்புரை:

இது ஒரு நூலல்ல, பல நூல்களின் கலவை என ஆவி. கண்ணம்பிரத்தினம் கூறுவது மிகையல்ல. பதிப்புரை, அணிந்துரை, மதிப்புரை என எதை எழுதினாலும் அதில் ஒரு ஆழ்ந்த புலமை நுட்பமும் புதிய பார்வையும் பளிச்சிடும். இது ஆர். பார்த்த சாரதியின் ஸ்பெஷல். இந்நூல் தமிழகத்தில் உலகாயதம், தொல்காப்பியம், பொருளதிகாரம், சங்க இலக்கியம், பத்துப்பாட்டு பாடலும் பொருளும். திருப்பாவை, திருவெம்பாவை, மணிமேகலை, பண்டைத் தமிழின் ஒலி உணர்வும், இசை உணர்வும், தமிழர் சமூக உணவாக்கத்தில் ஆரியம் – தமிழ்மோதல் தமிழும் பாவேந்தர் பாரதிதாசனும், பாரதிதாசன் நறுமலர் கொத்து, வடமொழியின் இலக்கிய வரலாறு என கட்டுரைகள் அதா வது 11 அறிமுகங்கள் ஒவ்வொன்றும் மேலும் சிந்திக்க தேடத் தூண்டுகிறது. பல வரலாற்றுச் செய்திகளும், பல புதிய தகவல்களும் அடங்கிய இந்நூல் புதிய ஆய்வுத் தேடலுக்கு உந்து விசையாகும் என்பதில் ஐயமில்லை.