புத்தகத்தின் பெயர் :பிரபாகரன் வழிகாட்டி நேதாஜி 100
ஆசிரியர் : சபீதா ஜோசப்
வெளியீடு :நக்கீரன் வெளியீடு
விலை : ரூ.100/-
பக்கம் : 160

புத்தக மதிப்புரை:

நேதாஜி பற்றிய 100 தகவல்கள் அடங்கிய புத்தகம் இது. சபீதா ஜோசப் எழுதுகிற 100 வரிசைகளில் இதுவும் ஒன்று. வழக்கம்போல் அவரது வாழ்விலிருந்து பலசெய்திகள், தகவல்கள் சேர்க்கப்பட்டுள்ளது. பல பயன்உள்ளவை. இது முழு வாழ்க்கை வரலாறு அல்ல. கொறிப்பதற்கு செய்திகள், அவற்றில் அசை போடவும் பல உண்டு. ‘நேதாஜி 100’ என்று சொன்னாலே போதுமானது ‘பிரபாகரனின் வழிகாட்டி’ என சபீதா ஜோசப் வலிந்து தலையிட வேண்டிய அவசியம் என்ன? நேதாஜியின் சூழல்வேறு, பார்வைவேறு -பிரபாகரனின் சூழல்வேறு, பார்வை வேறு. பிரபாகரனுக்கு நேதாஜி மீது மட்டற்ற மரியாதை இருக்கக் கூடும். அதுதான் நேதாஜியை அறிமுகப்படுத்தும் அளவுகோலாகுமா? வங்க சிங்கம் நேதாஜியின் போராட்ட வியூகமும் வீரமும் கர்ஜனையும் தேச விடுதலை என்ற மூச்சுக்காற்றை சுற்றியன்றோ.