என்ன செய்யலாம் இதற்காக?’ என்ற நூல் வெளியீட்டு விழா சென்னை தி.நகர் தியாகராஜாக் கல்லூரியில் நேற்றுப் பிற்பகல் 5 மணியளவில் தமிழ்ப் படைப்பாளிகள் கூட்டமைப்பைச் சேர்ந்த எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் தலைமையில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவர் பழ.நெடுமாறன், நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான், தமிழருவி மணியன், இயக்குனர் மணிவண்ணன், நடிகர் நாசர் மற்றும் ஈழ ஆதரவுக் அமைப்புக்களின் பிரதிநிதிகள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இந் நிகழ்வில் வரவேற்புரையை நூல் வெளியீட்டுக் குழுவின் சார்பில் காளிங்கனும், அறிமுக உரையை நூலாசிரியர் ஜெ.பிரபாகரனும் நிகழ்த்தினர். இந் நூலின் அணிந்துரையை நீதியரசர் வி.ஆர்.கிருஷ்ணய்யர், அமெரிக்காவைச் சேர்ந்த மருத்துவர் எலன் சாண்டர், ஜேர்மனி மனிதவுரிமை செயற்பாட்டாளர் விராஜ் மென்டிஸ் மற்றும் இலங்கையைச் சேர்ந்த சிறிதுங்க ஜெயசூர்யா ஆகியோர் நிகழ்த்தினர்.

1956ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு மே மாதம் வரை சிறிலங்கா அரசாங்கத்தால் ஈழத்தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலை நடவடிக்கைகளின் ஆவணமாக 371 புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளன.இந் நூல் வெளியீட்டினை காந்தி கிராமியப் பல்கலைக்கழக முன்னை நாள் துணைவேந்தர் முனைவர் மார்க்கண்டன் வெளியிட, International movement against all forms of discrimination and racism (IMADR) எனும் அமைப்பின் தலைவர் நிமல் பெர்ணான்டோ (இலங்கை) பெற்றுக் கொண்டார்.இந் நிகழ்வில் நிமல் பெர்ணான்டோ உரையாற்றும் போது, சிறிலங்கா அரசாங்கத்தின் மிக மோசமான மனிதவுரிமைக் கொள்கைகளை காட்டமாக விமர்சித்தார். சிங்களவர் கூட தமிழர்களின் உரிமை பற்றி வாய்திறக்க முடியாதபடி சிறிலங்கா அரசாங்கத்தினால் முடக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்க்காட்டினார்.இந் நிகழ்வின் சிறப்பு விருந்தினர் பேராசிரியர் துரோடர் எஸ்.ஒர்லின் IHR Education Consortium and Utical Collage USA, தனதுரையில் குறிப்பிடும் பொழுது, இலங்கையில் நடைபெற்ற மனிதப் படுகொலை தொடர்பாக தனது ஆழ்ந்த கவலையை வெளியிட்டார்.’குறிப்பாக தமிழ்மக்களுக்கு எல்லா அடிப்படை உரிமைகளும் மறுக்கப்பட்டுள்ளன என்பதை அவர் சுட்டிக்காட்டினார். அதாவது தமிழ் மக்கள் சுதந்திரமாக நடமாடவும், அவர்கள் தமது சொந்த இடங்களில் குடியேறவும் அவர்கள் விரும்பும் இடத்தில் வேலை புரியவும் அவர்களுக்கு உரிமை உண்டு.ஆனால், சிறிலங்கா அரசாங்கம் எல்லா விதத்திலும் தமிழ் மக்களுக்கு துன்பத்தைக் கொடுத்து வருகின்றது. இந்தியா காந்தியைத் தேசபிதாவாகக் கொண்ட உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு என்ற வகையில் தனது அயலவர்கள் ஜனநாயகத்தைக் கைக்கொள்ள இயன்ற வரை உதவ வேண்டும்’ என்றும் பேராசிரியர் துரோடர் எஸ்.ஒர்லின் கேட்டுக் கொண்டார். அவர் உரையாற்றும் போது அவருக்கு பலத்த கரவோசம் அவையினரால் எழுப்பப்பட்டது.காந்தி கிராமியப் பல்கலைக்கழக முன்னை நாள் துணைவேந்தர் முனைவர் மார்க்கண்டர் உரையாற்றும் போது, இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் பற்றிக் குறிப்பிட்டார். ‘இலங்கையில் சீனக் கைத்திகள் சுதந்திமாக நடமாடித் திரிகின்றனர். ராஜபக்சவின் பெயரால் துறைமுகம் கட்டப்படுகின்றது. இந்திய மீனவர்கள் சீனாவைச் சேர்ந்த மீன்பிடிப் படகுகளால் தாக்கப்படுகிறார்கள். இந்தியா இலங்கை மற்றும் சீனாவின் போக்கைப் புரிந்து கொள்ளாது முட்டாள்தனமாக நடந்து கொள்கிறது’ என அவர் தனதுரையில் குறிப்பிட்டார்.அவை மிகவும் எழுர்ச்சியாகவும் கலகலப்பாகவும் காணப்பட்டது. இந் நிகழ்வில் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியைச் சிறப்பித்தனர். இந் நூலின் பிரதியை வாங்க முண்டியடித்து நீண்ட வரிசையில் மக்கள் நின்றனர். பிரதிகளை அவர்கள் பெற்றுக் கொண்ட விதமானது நெஞ்சை நெகிழ வைக்கும் விதமாக அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.இந் நூலைப் பெற்றுக் கொள்ள விரும்புகின்றவர்கள் நூல் வெளியீட்டுக் குழுவின் கீழ் வரும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளலாம். 00 91 94864 86321, 00 91 90038 27608