தமிழில்: சா.தேவதாஸ்
வெளியீடு: வம்சி புக்ஸ், 82, மத்தலாங்குளத் தெரு, திருவண்ணாமலை.

பக்கம்: 386 விலை: 200

அமெரிக்காவும் ஐரோப்பாவும் சொந்தம் கொண்டாடும் ஹென்றி ஜேம்ஸின் புகழ்பெற்ற நாவல்களில் ஒன்று. வெற்றிகரமான ஒரு வியாபாரி… கலையையும் வாழ்வின் அர்த்தத்தையும் தேடிப் பயணிக்கும்போது ஒரு பெண்ணைச் சந்திக்கிறார். போலி கௌரவங்களால் நிரம்பப்பெற்ற அவளால் ஏமாற்றப்படுகிறார். அமெரிக்காவுக்குத் திரும்பிச் செல்பவர் மீண்டும் அந்தப் பெண்ணைத் தேடி ஐரோப்பா வருகிறார். இந்த நீண்ட பயணத்தின் இடையே, இருவேறு மேற்குலகக் கண்டங்களின் அரசியல் விவரிக்கப்படுகிறது. மொழிபெயர்ப்பு இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யமாக, எளிமையாக இருந்திருக்கலாம்!

நன்றி : ஆனந்த விகடன்