தொகுப்பு: கு.பூபதி
வெளியீடு: தோழமை, 5டி,பொன்னம்பலம் சாலை,
கே.கே.நகர், சென்னை-78.

பக்கம்: 400 ,லை ரூ.275

பிரபாகரனுக்குச் சித்தாந்தப்புரிதல் கிடையாது என்பவர்கள் இந்தப் புத்தகத்தை முழுமையாகப் படிக்க வேண்டும். சிங்களப் பேரினவாதத்துக்கு எதிராக சீறிக் கிளம்பிய இந்தப் புலியிடம் ஆக்ரோஷம் மட்டுமல்ல; அறிவு சார் அரசியலும் நிறைந்திருந்தது. ஒரு விடுதலை இயக்கத்தின் வேட்கையும், போராட்டப் பாதையும் தீர்மானிக்கப் படுவது அந்த மண்ணால்… மக்களால். ‘வன்முறைக்குத் தீர்வு அதைவிடப் பெரிய வன்முறை’ என்கிற வார்த்தைகளுக்குள் ஒளிந்திருப்பது ஓர் இனத்தின் உரிமைக்கும், உயிருக்குமான ஏக்கம் என்ப தைச் சமரசம் இன்றி எடுத்து வைக்கிறான் இந்தச் சமர் வீரன். முழு முற்றாக ஓர் இனத்தை அழிக்கத் துடித்த அதிகார வெறிஆட்டத்தை எதிர்கொள்ள விடு தலைப் புலிகள் முன்னெடுத்த போர்ப் பாதை நியாயமானது என்பதைத் தனது ஒவ்வொரு வார்த்தை யிலும் உறுதிப்படுத்துகிறார் பிரபாகரன். இந்த நூல் நூற்றாண் டின் தலைசிறந்த தமிழ்வீரன் நமக்கு ஈந்த போராட்ட ஆவணம். பிரபாகரனின் 20 வருடப் பேச்சும், நேர்காணலும் எந்த நூற்றாண்டுக் கும் உலகத் தமிழர்களுக்கு உரிமைப் பாடம்!

நன்றி : ஆனந்த விகடன்