எம்.குமார்
தமிழில்: குளச்சல் மு.யூசுப்
வெளியீடு: தென்திசை பதிப்பகம்,
52. தென்மேற்கு போக் சாலை,
தியாகராய நகர், சென்னை-17.
பக்கம்: 256 விலை ரூ.140

மலையாளத்தின் மிகவும் புகழ்பெற்ற எம்.குமாரின் ‘ஒரு அமர கதை’ தமிழில் வெளிவந்திருக்கிறது. நுட்பமான அழகு உணர்வுகளைத் தூண்டச் செய்து, இதுவரை நாம் அவ்வளவாகப் பயணித்தறியாத எல்லைக்கு இழுத்துச் செல்கிறது. ஆன்மிக மரபில் கதை நகர்ந்து, வேறு தளத்துக்கு இட்டுச் செல்வதால், இந்த மொழிபெயர்ப்பு மிகவும் அவ சியமாகிறது. தத்துவ மரபுகளில் ஈடுபாடுகொண்ட எம்.குமாரின் பார்வைகள் மறுவாசிப்பைத் தூண்டுகின்றன. நிதானமாக உள் வாங்கிகொண்டு, மொழிபெயர்ப்பை அர்த்தமுள்ளதாக்கி இருக்கிறார் குளச்சல் மு.யூசுப். தேர்ந்த வாசகர் களுக்கான புத்தகம்!

நன்றி : ஆனந்த விகடன்